Accaddemy

(வீடியோ) ஓட்டமாவடி தூய குடி நீர் விடயத்தில் முன்வைத்த காலை பின் வைக்காத கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா.



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.
.
வீடியோ:-


பல போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபையினர் முன்னெடுத்த கல்குடாவிற்கான தூய குடி நீர் வழங்கும் திட்டத்தின் முதற் கட்டமாக இன்று 01.010.2016 ஓட்டமாவடிக்கு முறையில் தூய குடி நீரினை வழங்கி வைத்தமையானது  கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபையானது ஓட்டமாவடிக்கு தற்காலிகமாவது தூய குடி நீரினை வழங்கி வைக்கும் திட்டத்தில் தான் முன் வைத்த காலினை கடைசி வரைக்கும் பின் வைக்காத விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

இன்று ஓட்டமாவடி கொழும்பு வீதியில் உள்ள பிரதான வர்த்தக நிலையமான அக்கீல் வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் இடம் பெற்ற உத்தியோக பூர்வ தூய குடி நீர் வழங்கும் குறித்த ஆரம்ப நிகழ்வில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் கணக்கறிஞருமான றியால் பிரதம அதீதியாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்ததோடு ஷூரா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் போராலிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்த தூய நீரினை தற்காலிகமாவது கல்குடா மக்கள் குடிக்க இருப்பதற்கு பிரதான காரணமான கல்குடா மஜ்லிஸூஸ் ஷூரா சபை, மற்றும் உயர் மட்டங்களோடும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையோடும் பல சிரமங்களுக்கு மத்தியில் நிருவாக மற்றும் திட்டமிடல் ரீதியாக கலந்துரையாடிய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளரும் ஷூரா சபையின் ஆலோசகருமான எஸ்.ஏம்.எம்.றியாஸ் அதனோடு சேர்த்து தொடர்ந் தேர்ச்சியாக முஸ்லிம் காங்கிரசின் தலைமையோடு கதைத்து இத்திட்டத்தினை நிரந்தமாக கல்குடா மக்களுக்கான திட்டமாக கொண்டு வருவதற்கு தன்னால் முடியுமான முயற்சியிகளை மேற்கொண்டு வரும் முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் கணக்கறிஞருமான றியால் போன்றோவர்கள் நிச்சயமாக கல்குடா மக்களால் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பது கல்குடா மக்களின் கருத்தாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

(வீடியோ) ஓட்டமாவடி தூய குடி நீர் விடயத்தில் முன்வைத்த காலை பின் வைக்காத கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா. (வீடியோ) ஓட்டமாவடி தூய குடி நீர் விடயத்தில் முன்வைத்த காலை பின் வைக்காத கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா. Reviewed by Madawala News on 10/01/2016 07:52:00 PM Rating: 5