Ad Space Available here

எதிர்வரும் 04 வருடங்களுக்குள் கிழக்கில் உள்ள சகல வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் !


(சுலைமான் றாபி) 
எதிர்வரும் 04 வருடங்களுக்குள் கிழக்கில் உள்ள சகல வைத்தியசாலைகளும் அதனோடு இணைந்த சுகாதார தேவைகளும்  அபிவிருத்தி செய்யப்படும் என சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்றைய தினம் (14) மாலை நிந்தவூர் மக்களினால் பொது தேவைக்காக கொள்வனவு செய்யப் பட்ட 6.5  ஏக்கர் காணிக்கு மண் நிரப்பும் பணியினை ஆரம்பித்து வைக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் : 

இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதனை மக்களிடத்தில் பிழையாக சித்தரிக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.  ஏனென்றால் தனது வெற்றிக்கு நிந்தவூர் மக்கள் மட்டுமா வாக்களித்தனர் என்கின்ற கேள்வியை மக்கள் மத்தியில் திணிக்கின்றனர். ஆனால் இந்த விடயத்தில் பொதுமக்கள் சற்று நிதானத்துடன், பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.  

மேலும் அதீத பிரயத்தங்கங்களுடன் நிந்தவூர் நலன்புரிச்ச சபையினர் பொது மக்களுடன் இணைந்து கொள்வனவு செய்யப்பட இந்தக் காணியானது இவ்வாரம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகவுள்ளது. இதன் மூலம் இந்தக் காணியில் வைத்தியசாலையை அமைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்த வகையில்  மு.கா தலைவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்களுக்கும் நன்றிகள் உரித்தாவதோடு, விஷேடமாக நிதியமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள சன நெரிசலினால் எதிர்காலத்தில் இட பற்றாக்குறை நிலவும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. இவைகளையும் ஓரளவிற்கு குறைப்பதற்காக வேண்டி பிரதான வீதியிலிருந்து மேற்குப்பக்கமாக சுமார் 500 மீற்றர் தூரத்திற்கு அப்பால் நிந்தவூர் முதல் காரைதீவு வரைக்குமான வீதியினை அமைத்து இரு பக்கமும் மக்களை குடியேற்றும் வசதிகள் மேற்கொள்ளப்படும்.  

சுகாதார பிரதியமைச்சர் என்ற வகையில் நிந்தவூரிற்கு மட்டும் எமது சேவைகள் விஸ்தரிக்கப்படவில்லை. மிகவிரைவில் எமது அமைச்சின் 
சாதாரண திட்டத்தின் கீழ் ஒலுவில் வைத்தியசாலைக்கு 2 மாடியும், பாலமுனை வைத்தியசாலைக்கு 03  மாடியும், இறக்காமதித்திற்கும், பொத்துவிலுக்கும் வைத்தியசாலை கட்டடங்களை நிர்மாணித்து கொடுக்கவுள்ளோம். 

இது தவிர பெரிய திட்டத்தின் கீழ் தோப்பூரின் வைத்தியசாலை அபிவிருத்திக்கும், மூதூர், கிண்ணியா மற்றும் புல்மோட்டை ஆகிய வைத்திய சாலைகளின் அபிவிருத்திக்கும் கூடுதல் நிதியினை வழங்கி அவைகளை அவைகளையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். 

அதேபோன்று சம்மாந்துறைக்கு 2000  மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலையொன்றும், 400  மில்லியனில் பொத்துவிலுக்கும், அவசர விபத்து சேவைப்பிரிவும் , திருக்கோவிலுக்கு 400  மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலையொன்றும் தெஹியத்தக்க கண்டியில் 1008  மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலையொன்றும், மகாஓயா விற்கு  வைத்தியசாலையொன்றும் மூவின மக்களும் பயன் பெறக்கூடியவாறே  எமது சுகாதார சேவைகளும், அபிவிருத்தி நடவடிக்கைகளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை கட்டிட தொகுதியும், சம்மாந்துறைக்கு நவீன வசதிகளைக் கொண்ட விடுதித்தொகுதி, பொத்துவிலுக்கு முதற்கட்டமாக 400  மில்லியன் ரூபா அவசர சிகிச்சை கட்டிட தொகுதி, மருதமுனைக்கு கட்டிட வசதிகள், கல்முனை முஸ்லீம் பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், இறக்காமம் மற்றும் வரிப்பத்தான்சேனைக்கு ஆரம்ப சுகாதார வைத்திய நிலையமும், அக்கரைப்பற்றுக்கு ஆரம்ப சுகாதார வைத்திய நிலையமும், பற்சிகிச்சைக் கூட்டமும், திருக்கோவில், காரைதீவு, தெஹியத்தக்க கண்டிய அம்பாறை போன்ற சகோதர இன மக்கள் வாழும் இடங்களுக்கும் கணிசமான அளவு நிதியினைக் கொண்ட சுகாதாரத்துடன் தொடர்பான மேமேம்பாட்டுத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  

இதேவேளை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நிந்தவூரில் ஆதார வைத்தியசாலையினை அமைக்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, இந்த வைத்தியசாலை நிர்மாணப் பணிகளானது நிந்தவூர் மக்களினால் பொது தேவைக்காக கொள்வனவு செய்யப்பட காணியிலேயே இடம்பெறவுள்ளது. 

அத்தோடு பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காஸிமின் முயற்சியினால் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையும் இந்தக் காணியிலேயே அமையப்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். 

எதிர்வரும் 04 வருடங்களுக்குள் கிழக்கில் உள்ள சகல வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் ! எதிர்வரும் 04 வருடங்களுக்குள் கிழக்கில் உள்ள சகல வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் ! Reviewed by Madawala News on 11/15/2016 08:40:00 PM Rating: 5