Free Space

முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தங்களும் சில அவதானங்களும்... பாகம் 1



- Reenum Maqra -

நாளை நீதிபதி சலீம் மர்சூஃப் தலைமையிலான குழு கூடுகிறது. அதில் முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒரு மீள்பரிசீலணைக்கு உட்படுத்தி சில மாற்றங்களை கொண்டுவர இருக்கிறார்கள் என நம்பலாம்.

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது வெறும் முஸ்லிம் திருமண, விவாக ரத்து சட்டம் (MMDA) மட்டுமல்ல... சொத்துரிமை, பள்ளி பரிபாலனம் தொடக்கம் வக்ப் சட்டம் வரை முஸ்லிம்கள் சம்பந்தமான அனேக சட்டங்கள் இதில் அடங்கும்.

இந்த சட்டத்தில் கை வைக்க பல ஆட்சிக்காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது GSP+ ஐக்காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் குதித்துள்ளது.

அதே நேரம், இந்தியாவிலும் முஸ்லிம்களுக்கு தனியாக சட்டங்கள் தேவையில்லை. பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் முகமாக பொதுச்சிவில் சட்டமொன்றை அமுலாக்க வேண்டும் என்ற கோணத்தில் இந்துத்துவா செயற்படுவது சந்தேகமளிக்கிறது.


ஏனெனில் இலங்கையில் இனவாதத்திற்கு அச்சாணி இந்துத்துவா தான். அவர்களது மறைகர உதவி இவர்களுக்கு இருக்கிறது. இப்போது இரு நாட்டிலும் ஒரே நேரத்தில் இந்த பிரச்சினை கிளப்பப்பட்டதில் பின்காரணிகள் கண்டிப்பாக இருக்கக் கூடும். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் அரசியலமைப்பு மாற்றத்தில் முஸ்லிம்களை ஓரம்கட்டும் செயற்பாடுகள் திரைமறைவில் பயங்கரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதை திசைதிருப்பும் காரணியாக கூட இது இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும் மு.த. சட்டத்தில் மாற்றங்கள் வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


■ திருத்தங்கள்.

1. முஸ்லிம் தனியார் சட்டம் என்றதுமே கண்முன்னே வருவது முஸ்லிம் விவாக, விவாக ரத்துச்சட்டம் தான். அதிலும் குறைந்த வயதுத்திருமணம், முத்தலாக் போன்றவை மாற்று மதச் சகோதரர்களால் மிகவும் விமர்சிக்கப்பட்டவை.


• பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்:
இப்போது 12 வயதில் முஸ்லிம் பெண் பிள்ளைகள் திருமணம் முடிக்கலாம் என சட்டம் சொல்கிறது. உண்மையில் பருவமடைந்த பெண்பிள்ளைகள் திருமணத்திற்கு உடலளவில் தகுதியானவர்கள் என்றாலும் கால சூழமைவுகளை கருத்திற்கொள்ளவும் வேண்டும்.


20, 23 வயதுகளில் முடித்தவர்களே திருமண வாழ்வில் matured இல்லாமல் தடுமாறும் போது, divorce வேண்டும் என்று காதிக்கோர்ட் வாயிலில் நிற்கும் போது எவ்வாறு ஒரு 12 வயதுச்சிறுமி அதற்குத் தகுதியுடையவளாக இருப்பாள்? உமர் ரழி அவர்கள், வறுமையின் போது திருடியவர்களின் கையை வெட்டவில்லை. ஆனால் இறைசட்டம், திருடினால் கையை வெட்டுவது... இதுதான் காலம், இடம், சூழலை அனுமானித்து சட்டத்தை அமுல்படுத்துவது...

இலங்கையைப் பொருத்தவரையில் 18 வயதுக்கு கீழ்ப்பட்டோர்கள் minor. ஆகவே ஒரு 18 வயதிற்கு குறைந்த பெண் கற்பழிக்கப்படும் போது அதற்கு தண்டனை உள்ளது. ஆனால் அதே வயது முஸ்லிம் யுவதியொன்றுக்கு இவ்வாறு நடக்கும் போது அதில் சட்ட சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே இலங்கையின் காலசூழலை அனுமானித்து வயதெல்லை 18 ஆக்கப்படவேண்டும்.


அதேபோன்று இலங்கையில் கட்டாயக்கல்வி பெறும் வயதெல்லை 16. ஆனால் 12 வயதில் திருமணம் செய்து வைக்கும் போது அடிப்படைக் கல்வி தடைப்படுகிறது. திருமண வயதெல்லையை 18 ஆக அதிகாரிக்கும் போது இதையும், Minor சார் issues ஐயும் சரிசெய்ய முடியும்.


எது எப்படி இருப்பினும் நீதிபதி சலீம் மர்சூஃப் தலைமையிலான குழு வயதெல்லையை 16 ஆக மட்டுமே அதிகரிக்கப் போகிறார்கள் என அறிய முடிகிறது.

உரையாடல் தொடரட்டும்....

(தொடரும்)
முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தங்களும் சில அவதானங்களும்... பாகம் 1 முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தங்களும் சில அவதானங்களும்...  பாகம் 1 Reviewed by Madawala News on 11/05/2016 08:44:00 PM Rating: 5