Accaddemy

ஆவணங்கள் இல்லாமல் கட்டாரில் வசித்த 1000 கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வெளியேற்றம் .



கடவுச்சீட்டு போன்ற அடிப்படையான ஆவணங்கள் இன்றி கட்டாரில் வசித்த 1000 கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மன்னிப்பு காலத்தில் வெளியேறி உள்ளனர்.பங்ளாதேஷ்,இலங்கை,நேபால் ஆகிய நாட்டவர்கள் உள்ளடங்குவர்.
தொழிலாளர் அமைப்பின் முதல் செயலாளர் Mohammed Rabiul Islam கூறுகையில் 700 கும் மேற்பட்ட உறுதி ஆவணங்கள் அற்ற நேபாலியர்களை கண்டுபிடித்தள்ளதாக அறிவித்தார்.அத்துடன் நாட்டிற்கு திரும்பிச் செல்ல உதவிகள் தேவைப்படின் தம்மை தொடர்பு கொள்ளும் படியும் கூறினார்.
மேலும் 229 நேபாளியர்கள் தமது பிரயாண ஆவணங்களை தம் தூதரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

450 இலங்கையர்கள் இந்த காலத்திற்குள் (செப்டம்ர் 1) கட்டாரிலிருந்து வெளியேறி உள்ளனர்.

அத்துடன் 6000-8000 இடைப்பட்ட இந்தியர்களும் இதன் மூலம் பயனடைந்துள்ளதாக இந்திய அலுவலகர்கள் தெரிவித்தனர்.
வீசா இன்றி கட்டாரில் வேலை செய்வது சட்டவிரோதமாகும்.அத்துடன் தொழிலார்கள் முதலாலிகளிடம் வேலை செய்வதாயின் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைக் காலத்தில் கட்டாரிலிருந்து வெளியேறவதாயின் அடிப்படை ஆவணங்களான கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள், ஆகியன சமர்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சு தெரிவத்துள்ளது.

மேலும் இந்நாடுகளைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் தமது உரிமையாளரினால் சம்பளம் கொடுக்கப்படாமலும் உடலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் இந்த சலுகைக் காலத்தில் ஆரம்ப கட்ட வேலைகளை செய்திருப்பதாகவும் இது பயனுடையது எனவும் அடுப்படை ஆவணங்கள் அற்ற பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கத்தாரில் இருந்து செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்
ஆவணங்கள் இல்லாமல் கட்டாரில் வசித்த 1000 கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வெளியேற்றம் . ஆவணங்கள் இல்லாமல் கட்டாரில் வசித்த 1000 கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்  வெளியேற்றம் . Reviewed by Madawala News on 11/11/2016 04:10:00 PM Rating: 5