துருக்கியில் ஆட்சியை கவிழ்க்க சதி : 10,000 அரசு ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்


துருக்கி நாட்டில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவசர கால ஆணை ஒன்றில் துருக்கி அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அடங்குவர். 

அமெரிக்காவைச் சேர்ந்த மதகுரு ஃபெதுல்லா குலன் இந்த சதிவேலைக்கு மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அவரை நாடு கடத்தி விசாரணை நடத்த துருக்கி அரசு ஆலோசித்து வருகிறது. பதற்றமான சூழல் நீடித்த வருவதால் 15 தொலைக்காட்சி ஊடகங்களை மூட துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

துருக்கி நாட்டில் அரசுக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 100000 பேர் வரை இதுவரை பணி நீக்கம் செய்ய்யப்பட்டுள்ள அதேவேளை 37000 பேர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியில் ஆட்சியை கவிழ்க்க சதி : 10,000 அரசு ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் துருக்கியில் ஆட்சியை கவிழ்க்க சதி : 10,000 அரசு ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் Reviewed by Madawala News on 11/01/2016 07:50:00 AM Rating: 5