Accaddemy

இராக்: தற்கொலைப்படைத் தாக்குதலில் 100 பேர் பலி



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இராக் நாட்டில் ஜஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 100 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இராக்  நாட்டின் கர்பாலா நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வழிபாட்டை முடித்து விட்டு யாத்திரிகர்கள் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது ஹில்லா என்ற இடத்தில் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது ஐ.எஸ் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதில் பேருந்து வெடித்து சிதறியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலின் போது அங்கு நின்று கொண்டிருந்த 5 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
இராக்: தற்கொலைப்படைத் தாக்குதலில் 100 பேர் பலி இராக்: தற்கொலைப்படைத் தாக்குதலில் 100 பேர் பலி Reviewed by Madawala News on 11/25/2016 09:57:00 PM Rating: 5