இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 111 SLEAS பரீட்சையில் தோப்பூரில் எஸ்.எம்.எம்.றஹீம், கே.எம்.எம்.றிஸ்மி, எம்.எம்.ஹாபீஸ் ஆகியோர் சித்தி.



தோப்பூர் புஹாரி 

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 111 பரீட்சை பெறுபேறு இன்று (04)  வெளியாகியதில் தோப்பூரைச் சேர்ந்த மூன்று முத்துக்கள் சித்தியடைந்து தோப்பூரின் நீண்ட கால ஏக்கங்களின் ஒன்றினை எட்டியமைக்கு  தோப்பூரைச் சேர்ந்த மூன்று முத்துக்களுக்கும் தோப்பூர் பிரதேச மக்கள்  வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.


அந்த வகையில் அல்ஸிபா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம்.றஹீம், அல் அமான் வித்தியாலய அதிபர் கே.எம்.எம்.றிஸ்மி, தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பயிற்றப்பட்ட விஞ்ஞானப் பாட ஆசிரியர் எம்.எம்.ஹாபீஸ் மரைக்காயர் ஆகியோரே சித்தியடைந்துள்ளனர்.


இவர்கள் அடைந்த வெற்றி சாதாரணமானதல்ல. இவர்களது முயற்சியும், மாணவர்களுக்கு இதய சுத்தியோடு கல்வி கற்பித்துக் கொடுத்ததினால் மாணவர்களின் பெற்றோர்களது துஆவும் பரக்கத்தும் முக்கிய காரணமெனலாம்.

மென்மேலும் இவர்கள் வெற்றிக் கனிகளை சுவைத்திட மனமார்ந்த வாழ்த்துக்களை தோப்பூர் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 111 SLEAS பரீட்சையில் தோப்பூரில் எஸ்.எம்.எம்.றஹீம், கே.எம்.எம்.றிஸ்மி, எம்.எம்.ஹாபீஸ் ஆகியோர் சித்தி. இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 111 SLEAS பரீட்சையில் தோப்பூரில் எஸ்.எம்.எம்.றஹீம், கே.எம்.எம்.றிஸ்மி, எம்.எம்.ஹாபீஸ் ஆகியோர் சித்தி. Reviewed by Madawala News on 11/04/2016 08:49:00 PM Rating: 5