வியட்னாம் இரவு விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் பலி..


வியட்னாம் இரவு விடுதியில் ஏற்பட்ட தீயினால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெனோய் பிராந்தியத்தில் 8 மாடிகள் கொண்ட இரவு விடுதியில் நேற்று மாலை இந்த தீ ஏற்பட்டுள்ளது.

இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படையினருக்கு சுமார் 5 மணித்தியாலங்கள் எடுத்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வியட்நாம் பிரதமர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


வியட்னாம் இரவு விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் பலி.. வியட்னாம் இரவு விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில்  13 பேர் பலி.. Reviewed by Madawala News on 11/02/2016 07:50:00 PM Rating: 5