ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி பலி. #இந்தியா



-trichy reporter shahul hanmeed-

இந்தியா: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம், ஷகிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் இருந்து தீயானது கொளுந்துவிட்டு எரிந்தது.

காலை 5.20 மணியளவில்  இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி அபுல் அப்பாஸ் ஹூசைன் தெரிவித்தார். தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.இந்த பயங்கர தீ விபத்தில் தொழிற்சாலைக்குள் சிக்கிய 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த திடீர் தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி பலி. #இந்தியா ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி  பலி. #இந்தியா Reviewed by Madawala News on 11/11/2016 11:13:00 AM Rating: 5