சட்டவிரோத பெரும்பான்மை குடியேற்ற விவகாரம் ! புல்மோட்டை 14 ம் கட்டை பகுதியில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு


புல்மோட்டை 13 ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோத வெளிமாகாண பெரும்பாண்மை குடியேற்றங்கள் சில அமைக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் நடவடிக்கையினால் குச்சவெளி பிரதேச செயலாளர் ஊடாக அவசர அறிக்கை ஒட்டப்பட்டு வெளியேறாத நிலையில் ,   

இந்த விடயம் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் 2017 பெப்ரவரி மாதம் சட்ட விரோத குடியேற்றங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட இனவாத கும்பலில்  ஒருவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகநூலில் அமித் வீரசிங்க என்ற பெயரில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் புல்மோட்டை பிரதேசம் ஊடாக வீடியோ பதிவை மேற்கொண்டு அதனூடாக புல்மோட்டை பிரதேசத்தில் சவூதி அராபியாவின் நடைமுறைகளை பின் பற்றியே வாழ்கிறார்கள் அதிகமான பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும் முஸ்லிம்கள் ஹிஜாப் அதிகமாக அணியும் நடைமுறை பாகிஸ்தானின் நடை முறையை பின்பற்றி தாடிகள் வளர்க்கப்படும் நடவடிக்கை எதிராகவும், பௌத்தர்களுக்கு சொந்தமான இடத்தை முஸ்லிம்கள் யுத்தத்திற்கு பின்பு அடாவடியாக பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுல்ளான்.

மேலும் புல்மோட்டை முஸ்லிம்களுடைய கடைகளில் சிங்களவர்கள் யாரும் பொருட்கள் வாங்க கூடாது என்பதுடன் எதிர்வரும் 27 (ஞாயிறு )நாளை குறித்த சட்ட விரோத பகுதியில் சிங்கள மக்களுக்காக புதிய கடை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சிங்க பௌத்த இளைஞர்கள்  ஒன்றுபட வேண்டும் என்பதுடன் குறித்த நாளில் குறித்த பகுதிக்கு வரவேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டு   இனவாத கருத்துக்களை  வீடியோ பதிவினை முக நூலினூடாக தூபமிட்டுள்ளம்.

இந்த நிலையில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் முதல் அமைச்சர் நசீர் அஹம்மத் அவர்களுக்கு அறிவித்ததை தொடர்ந்து கிழக்கு மாகாண போலீஸ் மா அதிபருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும்படி படி பணித்ததுடன்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார மற்றும் திருகோணமலை மாவட்ட போலீஸ் பொறுப்பதிகாரி, குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான போலீஸ் அத்தியட்சகர் ,புல்மோட்டை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மேற்படி விடயமாக இனவாத கருத்துக்கள் அடங்கிய வீடியோ மற்றும் போட்டோக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அமித் வீர சிங்க என்பவர் பொதுபல சேனாவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதுடன் கடந்த கண்டியில் பொது பல சேனாவின் ஆர்ப்பாட்ட பேரணியில் இணைந்து கொண்டு இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இதனூடாக புல்மோட்டை பிரதேச மக்கள் பதற்றமடைந்த நிலையில்,

குறித்த விடயமாக அரசாங்க அதிபர் போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்ததன் அடிப்படையில் இன்று 26.11.2016 (சனி )குறித்த 14 ம் கட்டை பகுதிக்கு குச்சவெளிக்கு பொறுப்பான போலீஸ் அத்தியட்சகர் அடங்கிய குழுவினர் அனுப்ப அனுப்பப்பட்டதுடன் குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் அவர்களையும் அனுப்பி சட்ட விரோத கட்டடங்கள் எதையும் அனுமதிக்க கூடாது என்பதுடன் இன்று 26 (சனி) குறித்த பகுதிக்கான விசேட பாதுகாப்பிற்காக்க திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல போலீஸ் நிலையங்களில் இருந்து போலீஸ் பட்டாளங்களை புல்மோட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.
சட்டவிரோத பெரும்பான்மை குடியேற்ற விவகாரம் ! புல்மோட்டை 14 ம் கட்டை பகுதியில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு சட்டவிரோத பெரும்பான்மை குடியேற்ற விவகாரம் ! புல்மோட்டை 14 ம் கட்டை பகுதியில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு Reviewed by Madawala News on 11/26/2016 08:53:00 PM Rating: 5