Free Space

இலக்கிய மாநாட்டுப் பேராளர் பதிவு நவம்பர் 15ம் திகதி முடிவடையும்.



இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழாவையொட்டி இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்து உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா மாநாட்டில் பேராளர்களாகக் கலந்து கொள்ளுவோருக்கான பதிவுகள் இம்மாதம் 15ம் திகதி நிறைவு பெறும்.


இம்மாநாட்டுக்கான உள்நாட்டுப் பேராளர்கள் தொகை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 25 பேரை மாத்திரமே உள்வாங்க முடியும். எனினும் 15ம் திகதிக்கு முன்னர் குறித்த எல்லையை எட்டுமாயின் அத்துடன் பேராளர் பதிவு நிறுத்தப்படும்.


பேராளர்களாகக் கலந்து கொள்வோருக்கு 12ம் 13ம் திகதிகளில் பகலுணவும் தேனீரும் வழங்கப்படும். அத்துடன் மாநாட்டுச் சிறப்பு மலர், ஆய்வுக் கட்டுரைத் தொகுதி அடங்கிய மாநாட்டுப் பை ஒன்றும் வழங்கப்படும்.
இதேவேளை இந்தியாவிலிருந்து 35 பேரும் மலேசியாவிலிருந்து 10 பேரும் சிங்கப்பூரிலிருந்து 5 பேரும் ஐக்கிய அரபு ராஜ்யத்திலிருந்து 5 பேரும் பேராளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன் மாநாட்டில் கலந்து சிறப்பிக்க இந்தியாவிலிருந்து மேலதிகமாக 15 பேரும் வருகை தரவுள்ளனர்.


இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து விசேட அதிதிகளும் பேராசிரியர்களும் விசேட பேச்சாளர்களாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

பார்வையாளர்களாக எத்தனை பேரும் கலந்து கொள்ள முடியும். அவர்களுக்கு மேற் குறிப்பிட்ட வசதிகள் வழங்கப்படா என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காலம் அல்லது பதிவுகள் நிறைவு பெற்ற பின்னர் பேராளர் பதிவுக் கோரிக்கை விடுப்பது எங்களைச் சிரமத்துக்குள்ளாக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அஷ்ரஃப் சிஹாப்தீன்
பொதுச் செயலாளர்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாடு
இலக்கிய மாநாட்டுப் பேராளர் பதிவு நவம்பர் 15ம் திகதி முடிவடையும். இலக்கிய மாநாட்டுப் பேராளர் பதிவு நவம்பர் 15ம் திகதி முடிவடையும். Reviewed by Madawala News on 11/06/2016 11:35:00 AM Rating: 5