Free Space

15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் கட்ட உள்ள சாரதிகள் இவர்கள் தான்.



செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான தண்டப் பணம் 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான ஆயிரம் ரூபாய் தண்டப் பணத்தையும் 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து குறைந்த தண்டப் பணத்தை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றில் விளக்கம் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதில் என்ன தவறு காணப்படுகிறது என கேள்வியெழுப்பிய ரவி கருணாநாகய, தண்டப் பணம் செலுத்த விருப்பம் இல்லை எனில் தவறு செய்யாமல் இருக்குமாறும் குறிப்பிட்டார்.
15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் கட்ட உள்ள சாரதிகள் இவர்கள் தான்.  15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் கட்ட உள்ள சாரதிகள் இவர்கள் தான். Reviewed by Madawala News on 11/19/2016 10:44:00 AM Rating: 5