Free Space

திருமண வயதை 16 ஆக அதிகரிப்பதே நிபந்தனை : ஐரோப்பிய ஒன்றியம்


-Vidivelli-
ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கையை பெற வேண்­டு­மானால் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் மாற்ற வேண்டும் என நிபந்­தனை விதித்­துள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை கண்டு தாம் ஆச்­ச­ரியம் அடைந்­த­தாக இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர் டங் மார்க் தெரி­வித்தார்.

சர்வ­தேச சம­வா­யங்­க­ளுக்­க­மைய பெண்­களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் என்­பதே எமது நிபந்­த­னை­யாகும். தனியார் சட்­டத்தை மாற்­று­வதும் மாற்­றாமல் விடு­வதும் உங்­க­ளது உள்­ளக விட­ய­மாகும். அதில் நாம் ஒரு­போதும் தலை­யி­ட­மாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இலங்­கைக்கு வருகை தந்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றிய எம்.பி.க்கள் குழு­வினர் கொழும்பில் நேற்று நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர்  டங் மார்க் மேலும் குறிப்­பி­டு­கையில், 
இது தொடர்பில் ஊட­கங்­களில் வெளி­யான செய்­தியை கண்டு நாங்கள் ஆச்­ச­ரியம் அடைந்தோம். 

இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை பெற்றுக் கொள்ள வேண்­டு­மானால் 27 சர்­வ­தேச சாச­னங்­களை மதிக்க வேண்டும். சர்­வ­தேச சாசனம் என்ன கூறு­கின்­றது என்றால் 16 வய­தி­னி­லேயே ஒரு பெண் திரு­மணம் முடிக்க தகு­தி­யா­கின்றார்.

இந்தச் சர்­வ­தேச சாச­னத்தை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொண்டால் தான் ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை கிடைக்கும்.
 
நீங்கள் கூறு­கின்ற இந்தத் திரு­மணச் சட்­டத்தை மாற்­று­வதும் மாற்­றா­ததும் உங்கள் விடயம். உங்­க­ளு­டைய உள்­ளக விட­யங்­களில் நாங்கள் தலை­யிட மாட்டோம்.

ஆனால் பெண்களின் திருமண வயதானது 16 வயதாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச சாசனத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றார்.
திருமண வயதை 16 ஆக அதிகரிப்பதே நிபந்தனை : ஐரோப்பிய ஒன்றியம் திருமண வயதை 16 ஆக அதிகரிப்பதே நிபந்தனை : ஐரோப்பிய ஒன்றியம் Reviewed by Madawala News on 11/02/2016 12:32:00 PM Rating: 5