Free Space

சற்றுமுன்னர் 18 பேருக்கு மரண தண்டனை. #இலங்கை



அவிசாவளை - தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் நிஹால் பெரேரா கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் அத்தகொட்டா உள்ளிட்ட 18 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமையாளரின் காவலாளிகள் மூவர் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்தனர்.
சற்றுமுன்னர் 18 பேருக்கு மரண தண்டனை. #இலங்கை சற்றுமுன்னர் 18 பேருக்கு மரண தண்டனை. #இலங்கை Reviewed by Madawala News on 11/25/2016 01:36:00 PM Rating: 5