19 ம் திகதி தம்புள்ளை ஆர்பாட்டம் தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ...


தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனை நிறுத்தக்கோரி தம்புள்ளை பள்ளி நிருவாக உறுப்பினர் சலீம்டீன் அவர்கள் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் பாதூகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ள நாம் மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஏக்கநாயக்க அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது...

ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..

ஆர்பாட்டம் செய்கிறோம் என எவரும் சட்டத்தை கையில் எடுக்க ஒருபோதும் நான் அனுமதிக்கப்போவதில்லை தம்புள்ளை பிரதேச பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்கனவே நான் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் அப்பிரதேச பள்ளிவாயல் மற்றும் மக்களின் பாதூகாப்பு தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னோடு கலந்துரையாடினர். 

அவர் தவிர மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் என்னை தெளிவுபடுத்தினார்.

நாங்கள் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வண்ணம் இந்த விடயத்தை கையாள்வோம் எனவும்எவரும் அசம்பாவிதங்கள் இடம்பெறும் என அச்சம்கொள்ளத்தேவையில்லை என அவர் 
மேலும் குறிப்பிட்டார்.
19 ம் திகதி தம்புள்ளை ஆர்பாட்டம் தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ... 19 ம் திகதி தம்புள்ளை ஆர்பாட்டம் தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ... Reviewed by Madawala News on 11/14/2016 11:18:00 PM Rating: 5