Yahya

டான் பிரியஸாத்தின் கைது சகோ.அப்துல் ராசிக்கின் கைதுக்கு எவ்வாறு ஈடாகும் ? ( பாகம் 1)முகப்புத்தகமும் ஒரு முஸ்லிமும் 

வடு -1-சகோ.அப்துல் ராசிக் கைது 

முகப்புத்தகத்தில் தன்னை பதிவிட்டுக் கொண்ட, சமூக ஆர்வம் கொண்ட, ஒரு சிந்திக்கும் முஃமீனின்  அவலக் குரலாய் இது அமையலாம் சோதரனே !!!
வேறு அறிமுகங்கள் எதுவும் இன்றி உங்கள் சிந்தனா ஓட்டத்துக்குள் கொஞ்சம் குதிக்கிறேன்.உங்கள் வாழ்க்கையை என்னால் வாழ முடியாது ஆனால் அந்த வாழ்க்கையில் சிறிய அதிர்வுகளை உருவாக்க என்னால் முடியும், ஒரு எழுத்தாளனாய்.

என்னை பற்றிய ஒரு விளக்கம், "அறிமுகம்" என்ற வார்த்தையை விட "விளக்கம்" என்ற "வார்த்தையே  பொருத்தமாய் இருக்கும்.
இந்த பதிவுகளை மேலோட்டமாக வாசிக்கும் ஒரு பொடுபோக்கு முஸ்லீம் என்னை ஒரு இஸ்லாமிய இயக்கத்துக்குள் வகைப்படுத்த முயலக்கூடும், என்னை இனவாதியாய் சித்தரிக்கக்கூடும்,இஸ்லாத்தின் எதிரியாய் பார்க்கக்கூடும்.

இவை எதிலுமே சாராதவன் நான், இலங்கை தாய் நாட்டில் ஒரு கூரையின் கீழ் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ்வதோடு, என் இஸ்லாமிய சமுதாயம் கொஞ்சம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பது மட்டுமே, பல சமூகத்தவர்களுடன் தினந்தோறும் பழகித்திரியும் ஒரு வைத்திய மாணவனாக என் அவா.  

பதிவுக்குள் வருவோம் ....

டான் பிரியஸாத் என்பவனின் கைது, சகோ.அப்துல் ராசிக்கின் கைதுக்கு எவ்வாறு ஈடாகும் ? என்ற கேள்வி விதையை விதைத்து விட்டு ஆரம்பிக்கிறேன்.

யார் இந்த டான் பிரியஸாத் ? முகப்புத்தகத்தில் தனக்கென்று ஒரு பக்கத்தை நிறுவகித்து அதில் தினமும் முஸ்லிம்களுக்கு எதிராக பதிவுகளை பதிவிட்டுக் கொண்டே இருப்பான்.வீடியோக்களை இணையத்தில் ஏற்றுவான், அதில் அவனே தோன்றி, முஸ்லீம் கடைகளை தீக்கிரையாக்குவேன், குண்டு வீச்சுக்களை நடத்துவேன், துடிக்கத் துடிக்க முஸ்லிம்களை கொல்வேன் என்று தூசன வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பான். மானமுள்ள முஃமீனின் இரத்த நாடிகள் புடைத்து, கண்கள் கண்ணீர் சிந்த வேண்டும் , அந்த காடையனின் பேச்சை ஒரு முறை கேட்டால்.
சகோ.அப்துல் ராசிக் இவ்வாறு சிங்கள மக்களை தூசன வார்த்தைகளால் திட்டினாரா ?


கொலை செய்வேன் என்று அசச்சுறுத்தினாரா ?

சிங்கள கடைகளை தீக்கிரையாக்குவேன் என்று சபதமிட்டாரா ?

இல்லவே இல்லை .... இருவரின் செயற்பாடுகளுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு.
தனக்கும், தனது இயக்கத்துக்கும் நியாயம் என்றுப்  பட்டதை, இஸ்லாமிய சட்டத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதை ஆர்ப்பாட்டமாக வெளியிட்டார். அவரது கொள்கைகள் சரியா தவறா என்பது ஒரு தனித்      தலைப்பு , நான் அது பற்றி பேச வரவில்லை.      


டான் பிரியசாட் என்பவன் பொது பல சேனா இயக்கம் எனும் ஆலமரத்தின் வெறும் ஒரு இலை என்று தான் சொல்ல வேண்டும், அதற்கு பகரமாய் SLTJ எனும் ஒரு மரமே தூக்கு மேடை ஏறுவதா ?  


நான் மீண்டும் பதிவு செய்கிறேன் , நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். இன்று SLTJ மீது வீசப்பட்ட இதே கத்தி நாளை ஜமிய்யதுல் உலமா மீது வீசப்படும் என்பதே என் கவலை.

இன்று காலை முகப்புத்தகம் நுழைந்த எனக்கு என் இஸ்லாமிய சமூகத்தின் அவல நிலை குறித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
சகோ.அப்துல் ராசிக் அவர்களின் கைதுக்கு மகிழ்ச்சி தெரிவித்து எத்தனையோ முஸ்லீம் நண்பரகள் பதிவுகளை ஏற்றி இருந்தார்கள்.
பேரினவாதத்தின் உக்கிரத்தை கொஞ்சம் தணிக்கவும், அவர்களுடன் ஒற்றுமையை பேணவும் உண்மையை கொன்று விட்டு கோழைகளாக ஆமாம் போடுவதா ?

அழுதகைமையில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் , முஸ்லிம்களின் சொத்துக்களை சின்னாபின்னப் படுத்தி , முஸ்லீம் உயிரிகளை எந்தவொரு ஈவிரக்கமும் இன்றி குடித்து, முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரித்த பொதுபல சேனா  என்ற அமைப்பும், ஞானசார தேரரும் இன்று வரை எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி இறுமாப்புடன் தானே வலம் வருகிறார்கள். இந்த சட்டம் அந்த சம்பவம் குறித்து என்ன செய்தது ?
ஞானசார தேரரின் கைதுக்கு பகரமாய் அப்துல் ராசிக் அவர்களை கேட்டு இருந்தால் ஓரளவேனும் நியாயம் உண்டு என்று மனதை தேற்றிக் கொண்டு இருக்கலாம். நிச்சயமாக இன்று நடந்த வியாபாரத்தில் நீங்கள் தோற்று விட்டீர்கள் முஸ்லிம்களே !!!


பொதுபல சேனாவின் பேச்ச்சுக்கள் எவ்வளவு வன்முறையை தூண்டும் என்பது அதை செவிமடுத்தவர்கள்  மட்டுமே அறிவர். கோழைகளாக பல முஸ்லீம் தலைவர்கள் அவ்வியக்கத்துக்கு பயந்து அஞ்சி கண்டும் காணாதது போல்  இருந்த சமயத்தில் ,எதிர்த்து குரல் கொடுத்த மிகச் சிலரில்  அப்துல் ராசிக் மிக முக்கியமானவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சகோ.அப்துல் ராசிக் தன் அறியாமை காரணமாக புத்தபிரான் மனித மாமிசம் சாப்பிட்டதாக ஒரு முறை அறிக்கை விட்டார் என்பது உண்மை தான்
ஆனால் தான் பிழை என்று உணர்ந்ததும் பக்குவமாக மன்னிப்பு கேட்டார்,
அவ்வளவு தான்.

இன்னும் அவரினதும் , அவரினது இயக்கத்தினதும் வார்த்தை பாவணைகளில் சில குற்றங்கள் இருக்கலாம் ஆனால் பேரினவாத அமைப்புகளோடும் ,டான் பிரியஸாத் என்பவனோடும் ஒப்பிடும் போது அவை புறக்கணிக்கத்தக்கது என்று தான் சொல்ல வேண்டும்.

 All the Non-Muslims are offending Islam,
When a Muslim defends islam ,he is called a rascist.

முஸ்லீம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை தாக்குவார்கள் பதிலுக்கு ஒரு முஃமீன் கேடயம் பிடித்தால் அவன் இனவாதி எனப்படுவான். இது தான் இங்கு நடந்தது சோதரனே...
ஒவ்வொரு முஸ்லீம் நாடும் சின்னாபின்னப்பட்டு போனதற்கும் இந்த மனநிலை தான் காரணம் சோதரனே. சதாம் ஹுசைனுக்கும் , கடாபிக்கும் இந்த தண்டனை தேவை தான் என்று மத்திய கிழக்கு நாடுகள் எண்ணியது தான் வரிசையாக ஒவ்வொரு நாடாய் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் சோதரனே. இறுதியில் சவுதி அரேபியாவின் கழுத்தில் அந்த கத்தி வந்து நிற்கும் வரை ஓயாது.


இரத்தின சுருக்கமாக சொல்வதென்றால் , கடல் நுரை அளவு நாம் இருந்த போதினும் நாங்கள் கோழைகள் ஆகி விட்டோம். உயிருக்கு அஞ்சி சிலவேளை உண்மைகளை புதைத்து விட்டு பொய்யின் முதுகுகளை சொரிந்து கொண்டு இருக்கிறோம். முகப்புத்தக சோதரனே , ஒரு விடயத்தை ஆராயாமல், சிந்திக்காமல் பதிவுகளை ஏற்றாதீர்கள்,அல்லாஹ்வுக்காக.
 ஒற்றுமையில்லா இந்த சமூகம் ஒரு நாள் முழுதாய் வீழும் , அதை  எந்த நல்லாட்சி அரசாங்கத்தாலும் காப்பாற்ற முடியாது …

றூஹி 
கண்டி (17/11/2016)
   

டான் பிரியஸாத்தின் கைது சகோ.அப்துல் ராசிக்கின் கைதுக்கு எவ்வாறு ஈடாகும் ? ( பாகம் 1) டான் பிரியஸாத்தின் கைது சகோ.அப்துல் ராசிக்கின் கைதுக்கு எவ்வாறு ஈடாகும் ? ( பாகம் 1) Reviewed by Madawala News on 11/17/2016 07:07:00 PM Rating: 5