ஜனாதிபதியானவுடன் 2 முதல் 3 மில்லியன் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன்.



தான் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற சுமார் 2 முதல் 3 மில்லியன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சி.பீ.எஸ் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதாள உலக கோஷ்டிகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற தான் முன்னுரிமை வழங்கி செயற்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்தே சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்ற தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் நம்பிக்கை உறுதியளித்துள்ளார்
ஜனாதிபதியானவுடன் 2 முதல் 3 மில்லியன் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன்.  ஜனாதிபதியானவுடன்  2 முதல் 3 மில்லியன்  குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன். Reviewed by Madawala News on 11/15/2016 10:55:00 AM Rating: 5