காஸ்மீர் போராளிகள் தாக்குதல். 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

ஜம்மு காஷ்மீரில் நக்ரோடா ராணுவ முகாம் மீது இன்று காஸ்மீர் போராளிகள்  தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள நக்ரோடா ராணுவத்தின் 166-வது படைப்பிரிவு முகாம் மீது காஸ்மீர் போராளிகள் இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தினர். காலை 5.30 மணி அளவில் அந்த முகாமிற்குள்  சிலர் போலீஸ் சீருடையில் நுழைந்து உள்ளனர்.  கையெறி குண்டுகளை வீசியதுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கியாலும் சுட்டனர். பின்னர் அருகில் இருந்த ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கிக் கொண்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

 கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், ராணுவ அதிகாரி ஒருவர், 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே  மரணம் அடைந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஜம்மு ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது.


அந்த கட்டிடத்துக்குள் பதுங்கி உள்ள  காஸ்மீர் போராளிகள்   இன்னும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு   வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியது.

அதிகமான ஆயுதம் தாங்கிய காஸ்மீர் போராளிகள் காவல்துறை சீருடையுன் இன்று ராணுவ அதிகாரிகளில் உணவக கட்டிடத்திற்குள் நுழைந்தனர், அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் மேலும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற போது 12 ராணுவ வீரர்கள், 2 பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் உள்ளே இருந்தனர்.


பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக அந்நாட்டு ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா இன்று பதவியேற்ற நிலையில் இத்தாக்குதலானது நடந்து உள்ளது.

http://www.nytimes.com/aponline/2016/11/29/world/asia/ap-as-kashmir.html?_r=0
காஸ்மீர் போராளிகள் தாக்குதல். 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு. காஸ்மீர் போராளிகள் தாக்குதல். 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 11/29/2016 08:57:00 PM Rating: 5