ஹஜ் உம்ரா யாத்திரைகளுக்கு 2010 க்கு பின்பு பெறப்பட்ட கடவுச்சீட்டுகள் மட்டுமே ஏற்கப்படும்





ARA FAREEL 
சவூதி ஹஜ் விவகார அமைச்சு அறிவிப்பு
ஹஜ், உம்ரா யாத்­திரை மேற்­கொள்­வோ­ரது கட­வுச்­சீட்டு 2010 ஆம் ஆண்­டுக்குப் பின்பு வழங்­கப்­பட்­ட­தாக இருக்­க­வேண்­டு­மென சவூதி அரே­பிய ஹஜ் விவ­கார அமைச்சு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

இந்தத் திடீர் உத்­த­ர­வினால் உம்ரா கட­மையை மேற்­கொள்ள தயா­ராக இருந்­த­வர்கள் பாதிப்­புக்கும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்­ளனர்.

சவூதி அரே­பியா விடுத்­துள்ள உத்­த­ர­வுக்கு அமைய 2010 ஆம் ஆண்­டுக்குப் பின்பு வழங்­கப்­பட்ட கட­வுச்­சீட்­டுகள் உடை­யோ­ருக்கே உம்ரா கட­மையை நிறை­வேற்ற அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டு­கி­றது.

2010 ஆம் ஆண்­டுக்குப் பின்பு வழங்­கப்­பட்ட கட­வுச்­சீட்­டு­க­ளுக்கே விசா­வுக்கு விண்­ணப்­பிக்க முடியும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் இந்த தீர்­மா­னத்­தினால் நவம்பர்– டிசம்பர் மாதங்­களில் உம்­ரா­வுக்குச் செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்ள ஆயி­ரக்­க­ணக்­கான பய­ணிகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

2010 ஆம் ஆண்­டுக்கு முன்பு வழங்­கப்­பட்ட கட­வுச்­சீட்­டு­களைக் கொண்­டுள்ள இவர்கள் புதிய கட­வுச்­சீட்­டு­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இதனால் நாட்டின் நாலா பக்­கங்­க­ளி­லி­ருந்தும் உம்ரா யாத்­தி­ரி­கர்கள் கட­வுச்­சீட்­டினைப் புதுப்­பித்துக் கொள்­வ­தற்­காக பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கு வருகை தரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

முகவர் நிலை­யங்­களும் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

பெரும்­பா­லான முகவர் நிலை­யங்கள் உம்ரா யாத்திரைக்கு சேகரித்திருந்த 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட கடவுச் சீட்டுகளை உரியவர்களுக்கு திருப்பிக் கையளித்து அவற்றைப் புதுப்பிக்கும்படி கோரியுள்ளன.
ஹஜ் உம்ரா யாத்திரைகளுக்கு 2010 க்கு பின்பு பெறப்பட்ட கடவுச்சீட்டுகள் மட்டுமே ஏற்கப்படும் ஹஜ் உம்ரா யாத்திரைகளுக்கு 2010 க்கு பின்பு பெறப்பட்ட கடவுச்சீட்டுகள் மட்டுமே  ஏற்கப்படும் Reviewed by Madawala News on 11/15/2016 01:14:00 PM Rating: 5