Accaddemy

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 2016 .

மாத்தளை கல்வி வலயத்தின் முன்னணி தேசிய பாடசாலைகளில் ஒன்றான அஜ்மீர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 2016 நவம்பர் 24 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.10.30 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் ஜனாப்.S.M.நிஸ்பர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக 2006 இல் உயர்தர விஞ்ஞானம் கணிதம் ஆகிய இரு பிரிவுகளையும் ஆரம்பிக்க உறுதுணையாக இருந்த முன்னால் அதிபர் M.I.தைபுதீன் அவர்களும் விசேட அதிதிகளாக இப்பாடசாலையின் முன்னால் ஆசிரியரும் மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை உதவி அதிபர் அல்ஹாஜ் (மெளலவி)Y.L.சுபியானுத் தௌரி அவர்களும் இப்பாடசாலையின் பழைய மாணவரும் கண்டி White house Restaurant உரிமையாளர் அல்ஹாஜ் N.M.M.மன்ஸுர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.


2013-2015 வரையான காலப்பகுதியில் தேசிய ரீதியாக நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி அடைந்த  மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களும் பரிசளித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

அன்றைய தினம் அதிபரினால் பரிசளிப்பு விழா மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது. இப்பரிசளிப்பு விழாவில் பெற்றோர்கள் பாடசாலை பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும் பாடசாலை அபிவிருத்தி குழு முன்னால் இந்நாள் அங்கத்தவர்களும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.  அன்பின் முன்னால் மாணவர்களே, அஜ்மீர் தேசிய பாடசாலையின் வெற்றியில் நீங்களும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்குதாரராகுவதற்கு உங்களை அன்புடன்  அழைக்கிறோம்.

தகவல்: ஸாதிகீன் ஆசிரியர் - உக்குவளை 

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 2016 . உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 2016 . Reviewed by Madawala News on 11/29/2016 11:54:00 AM Rating: 5