2017 இல் தனிநபர் வரிசுமை 19500 ஆல் அதிகரிக்கிறது ; ஊழல் எதிர்ப்பு முன்னணி ..


இவ்வருட வரவு செலவு திட்டத்தில் மக்களிடம் அரசு 39000 கோடி ரூபாய் புதிதாக வரி அறவிடவுள்ளதாக ஊழலுக்கு எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைவாக சிறுகுழந்தை முதல் பெரியோர் வரையான  தனிநபர் ஒருவர் 2017 ம் வருடம் 19500 ரூபாய் அரசுக்கு வரியாக புதிய வரியாக செலுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ள அவர் இதனை மறைமுகமான முறையில் மக்களிடம் அரசு பொருற்கள் மற்றும் சேவைகள் ஊடக பெற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி மோசடிகளில் மற்றும் இதர மோசடிகளில் அரசுக்கு ஏற்பட்டுள்ள  இழப்பீட்டை மக்களிடம் அறவிட அரசு வரவு செலவு திட்டத்தின் ஊடாக யோசனை முன்வைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
2017 இல் தனிநபர் வரிசுமை 19500 ஆல் அதிகரிக்கிறது ; ஊழல் எதிர்ப்பு முன்னணி .. 2017 இல்  தனிநபர் வரிசுமை 19500 ஆல் அதிகரிக்கிறது ; ஊழல் எதிர்ப்பு முன்னணி .. Reviewed by Madawala News on 11/13/2016 06:49:00 PM Rating: 5