Kidny

Kidny

2017 வருடத்திற்கான புதிய மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்.


       
 இலங்கையில் முன்னணி அரபுக் கல்லூரியான அல் யூஸுபிய்யாஹ் அரபுக் கல்லூரிக்கு 2017ம் ஆண்டுக்கான ஹிப்ழ் மற்றும் கிதாபுப் பிரிவுகளுக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 மாத்தளை மாவட்டத்தில் கெட்டவளை, மடவள உல்பொதவில் இயங்கி வரும் இக்கல்லூரியானது ஹிப்ழ் மற்றும் கிதாபுப் பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடநெறி முடிவின் போது சிறந்த தொழில்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில்,   O/L, A/L, மற்றும் கனனிக் கல்வியுடன் கூடிய விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஆங்கில மொழிப்பயிற்சிப் பாடநெறி என்பன அதி திறமைவாய்ந்த விஷேட தகைமையுடைய ஆசிரியர்களாலும் விரிவுரையாளர்களாலும் போதிக்கப்படுகினறன.

மாணவர்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கு  ஏதுவாக O/L, A/L பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக  பாடசலைக் கல்விப் பிரிவு தனியாக அனைத்து வளங்களுடனும் நவீன கனனி ஆய்வுகூடம் மற்றும் வாசிகசாலை வசதிகளுடன்  இயங்குகிறது.

மேலும் இக்கல்லூரியின் மாணவர்கள்  A/L கல்விiயை சிறந்த முறையில்; பூர்த்தி செய்து பல்கலைக் கழகம் நுழைவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்படுகின்றனர்.

 அத்துடன் சில மாணவர்கள் ஏற்கனவே பல்கலைக் கழக அனுமதியைப் பெற்றுள்ளதுடன் அனேகமான மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்வாய்புபுக்களைப் பெற்றுள்ளனர். ஹிப்ழ் மற்றும் கிதாபுப் பிரிவுகள் வௌ;வேறாக தனித்தனி கட்டிடங்களில் நடாத்தப்படுவதுன் மாணவர்களுக்கு தனியான விடுதி வசதிகள் மிகவும் சுகாதாரமான முறையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இக்கல்லூரிரியின் அமைவிடமானது கல்வி கற்பதற்கு ஏற்ற மிகவும் ரம்யாமான சூழலில் அமைந்துள்ளதுடன் இது மாணவர்களின் உடல் உள விருத்திக்குப் பெரும் உறுதுணையாகக் காணப்டுகின்றது. இக்கல்லூரி அண்மைக்காலமாக கல்வியில் மிகவும் சிறந்து விளங்குவதாலும் இயற்கை எழில்மிகு பரந்த சூழலில் காணப்படுவதாலும் அனவைரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இக்கல்லூரியில் சேரவிரும்பும் தகைமையுடைய மானவர்கள்
 2016-11-27ம் திகதி அல்லது 2016-12-04ம் திகதி  காலை 9:00 மணிக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கல்லூரிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஹிப்ழ் பிரிவிற்கான தகைமைகள்
*அல்குர்ஆன் முழவதையும் சரளமாக ஒதத் தெரிந்திருத்தல்.
*11 – 12 வயதிற்குற்பட்டவராயிருத்தல்.
*ஆண்டு 6 இல் அல்லது 7இல்; கல்வி கற்றுக்கொண்டிருத்தல்.
நன்நடத்தை, நல்லொழுக்கம், தேகாரோக்கியமுள்ளவராக இருத்தல்.

கிதாபு பிரிவிற்கான தகைமைகள்
அல்குர்ஆன் முழவதையும் சரளமாக ஒதத் தெரிந்திருத்தல்.
13 வயது பூர்தியாயிருத்தல்
ஆண்டு 8இல் அல்லது அதற்கு மேல் வகுப்புகளில் கல்வி கற்றுக்கொண்டிருத்தல்.
நன்நடத்தை, நல்லொழக்கம், தேகாரோக்கியமுள்ளவராக இருத்தல்.
O/l பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

குறிப்பு :-

நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்கும் மாணவர்கள் தமது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் ஒரு பிரதியையும், இறுதியாக சித்தியடைந்த பாடசாலை தேர்ச்சி அறிக்கையின் ஒரு பிரதியையும் கொண்டு வருமாறு வேண்டப்படுகின்றனர்.
மேலும் மாத்தளையூடாக வருபவர்கள் A9 வீதியூடக பயணிக்கின்ற பஸ்களிலும், தம்புள்ளையிலிருந்து வருபவர்கள் கண்டி பஸ்களிலும் பயணித்து மடவள உள்பொத என்னும் இடத்தில் இறங்கி மத்ரசாவிற்கு வரலாம்.

தொடர்புகளுக்கு :- 
அஷ்ஷெய்க்  A.S.M பைஸல்(ரஹ்மானி) - 077 3421 323 (அதிபர்)
அஷ்ஷெய்க்  M.A.Aபாசில் (புர்கானி)  -  077 9192 220 (உப அதிபர்)

CONFIRM YOUR REGISTRATION: TYPE: NAME, ADDRESS AND PHONE NUMBER AND SEND TO 077 342 1323  


Ketawala, Madawala Ulpotha, Matale, Sri Lanka. Tel: +94 66 2055930
E-mail: alyoosufiyyah@gmail.com
2017 வருடத்திற்கான புதிய மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்.  2017 வருடத்திற்கான புதிய மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல். Reviewed by Madawala News on 11/23/2016 08:21:00 PM Rating: 5