tg

2017 இல் இடம்பெறவுள்ள தேர்தலில் சுதந்திர கட்சியே வெற்றிபெறும் ...


எதிர்வரும் வருடம் நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெற்றி பெரும் என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

இன்று காலி நகரில் சுதந்திர கட்சிக்கு அங்கத்துவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்ற போது அவர் அங்கு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரியாற்றிய அவர்...

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை வெற்றிபெற வைக்கும் பொறுப்பை உறுதியாக நிறைவேற்றுவதாகவும், இனி இடம்பெற இருக்கும் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனது பழைய சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிடுமென்றும், அனைத்து இடதுசாரி முற்போக்கு கட்சிகளையும் அணிதிரட்டிக்கொண்டு கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச்செல்வதாகவும் தெரிவித்தார்.

வடக்கின் பிற்போக்குவாத்தையும், தெற்கின் பிற்போக்குவாதத்தையும் நிராகரித்து, அனைத்து இன மக்களும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல், மோசடி, முறைகேடுகளை இல்லாதொழித்து மக்கள் பணத்தை சட்டைப்பைகளில் போடாமல் நேர்மையாக பணியாற்றுவது எப்படியென்பதனை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் நாட்டிலுள்ள அனைவருக்கும் புதிய பாடமொன்றை கற்பிப்பது கட்டாயமானதென்றும் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்க காலத்தில் நில்வளகங்கை திட்டத்துக்கெனக் கூறி 4012 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2017 இல் இடம்பெறவுள்ள தேர்தலில் சுதந்திர கட்சியே வெற்றிபெறும் ... 2017 இல் இடம்பெறவுள்ள தேர்தலில் சுதந்திர கட்சியே வெற்றிபெறும் ... Reviewed by Madawala News on 11/26/2016 07:08:00 PM Rating: 5