Accaddemy

20 வருட பூர்த்தியில் மீள்பார்வை. தேசிய நிகழ்வு இன்று!



முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரச்சினைகளையும் வெளிக்கொணர ஓர் ஊடகமின்றி சமூகமே வாயடைத்து மௌனமாய் கிடந்த ஓர் சூழலில் 'தளிர்' ஆக துளிர்த்த 'மீள்பார்வை' மாதாந்த மீள்பார்வையாகி இன்று மாதம் இரு முறை வெளிவரும் மீள்பார்வை பத்திரிக்கை இலங்கையின் இஸ்லாமிய இதழியல் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெர்ரிருப்பத்ல் மகிழ்ச்சி.
மீடியா ஒரு பாரிய சக்தி. அது சவால்களை சமாளிப்பதற்கான ஒரு ஆயுதம். துரதிஷ்டவசமாக அது இன்று எமது கைகளில் இல்லை.


 அல்குர்ஆன் தனது முதல் வசனங்களிலேயே ஊடகத்துறையின் குறியீடான எழுது கோலைப் பற்றி குறிப்பிட்டுள்ளமை அதன்; கனதியை மதிப்பிட போதுமானதாகும். இஸ்லாத்தின் தூதை மக்களுக்கு எத்திவைப்பதுடன் அவர்களை சிந்தனா ரீதியான கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதே மீள்பார்வை ஊடகத்தின் பிராத்தனையாகும்.


சமூக மாற்றத்திற்காக 20 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வரும் மீள்பார்வையை நிதி ரீதியாக பலப்படுத்தும் நோக்கில் 2016 நவம்பர் 18-25 வரையான காலப்பகுதியை மீள்பர்வை வாரமாக பிரகடனப்படுத்தியுள்ள இந்நிலையில் இன்று மீள்பார்வையின் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு தேசிய வைபவமும், பரிசளிப்பு நிகழ்வும் கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர்கூடத்தில் மாலை மணிக்கு தேசிய ஊடக நிலையத்தின் தலைவர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும், பிரதம பேச்சாளராக அரசாங்க தகவல் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Dr. ரங்க கலன்சூரிய அவர்களும், கௌரவ அதிதிகளாக உஸ்தாத் மன்சூர் மற்றும் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.


தேசிய நிகழ்வைத்தொடர்ந்து மீள்பார்வை வாரத்தில் தேசிய ரீதியில் 40 இற்கும் மேற்பட்ட ஊர்களில் மீள்பார்வை நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

'ஊடகங்கள் வாயிலான தஃவாப்பணியே இன்றைய காலத்தின் முதன்மைத் தேவையாகும்'

விபரங்களுக்கு :: 0772435146 / 0772555111
20 வருட பூர்த்தியில் மீள்பார்வை. தேசிய நிகழ்வு இன்று! 20 வருட பூர்த்தியில் மீள்பார்வை. தேசிய நிகழ்வு இன்று! Reviewed by Madawala News on 11/16/2016 08:25:00 PM Rating: 5