இன்று ஐக்கிய அரபு எமிரேட்சின் விஷேட தினம்.. பின்னணியில் சுஹைல் பின் காமிஸ் ( 20 வயது) இன் தியாகம்.



நவம்பர் 30..

இன்று ஐக்கிய அரபு எமிரேட்சில் நாட்டுக்காக உயிர்நீத்த காவற்துறை வீரர்களின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. கடமையில் இருக்கும்போது உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காலை 8.30 மணிக்கு நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் அலுவலங்களில் பறக்கவிடப்பட்டுள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

11.30 - 11.31 வரை ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு 11.31ற்கு தேசியக்கொடி மீண்டும் உயர பறக்கவிடப்படும், அத்துடன் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெறவிருக்கின்றது.

1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி இதே போன்றதொரு நாளில்தான் நாட்டின் முதலாவது காவல்துறை அதிகாரியான சுலைமான் சுஹைல் பின் காமிஸ் வபாத்தானர், வபாத்தாகும்போது அவருக்கு வயது 20,


ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு சொந்தமான மூன்று தீவுகளை வலுக்கட்டாயமாக ஈரான் தன் வசப்படுத்தி வைத்திருக்கின்றது இதில் த கிரேட்டர் டன்ப், மற்றும் லெசர் டன்ப் ஆகிய இரண்டு தீவுகளும் ராஸ் அல் கைமாவிற்கு சொந்தமானது, அபு மூஸா சார்ஜாவிற்கு சொந்தமானது.

 த கிரேட்டர் டன்ப் தீவில் மர்ஹூம் சலீம் சுஹைல் கடமையிலிருந்த போது அத்து மீறி நுழைந்த ஈரான் படையினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடியை கீழே போட்டு விட்டு சரணடையுமாறு கூறியபோதே கொடியை கீழே போட மறுத்து துப்பாக்கி ரவைகளை வாங்கிகொண்டார், இதன் பிறகு மூண்ட சண்டையில் ஈரான் படைகள் பின்வாங்கியிருந்தது.

அவரது ஜனாஸா அந்த தீவிலேயே அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது அந்த தீவு பகை இன்னும் புகைந்துகொண்டே இருக்கின்றது ஈரானுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கும்.

ராஸ் அல் கைமாவை சேர்ந்த மர்ஹூம் சலீம் சுஹைல் இராணுவத்தில் சேரும்போது அவருக்கு வயது 18 இரண்டு வருடங்கள் மட்டுமே இராணுவத்தில் கடமை புரிந்து தனது 20வது வயதில் நாட்டுக்காக உயிநீத்த அவரின் நினைவாக இந்த நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படைவீரர் தினமாக அனுஷ்டிப்பதுடன் இன்றைய நாளை பொது விடுமுறை நாளாகவும் ஆக்கியிருக்கின்றது.

மர்ஹூம்களான அனைத்து படைவீரர்களினதும் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற நாமும் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

- ரசானா மனாப் -
இன்று ஐக்கிய அரபு எமிரேட்சின் விஷேட தினம்.. பின்னணியில் சுஹைல் பின் காமிஸ் ( 20 வயது) இன் தியாகம். இன்று ஐக்கிய அரபு எமிரேட்சின் விஷேட தினம்.. பின்னணியில் சுஹைல் பின் காமிஸ் ( 20 வயது) இன் தியாகம். Reviewed by Madawala News on 11/30/2016 10:49:00 AM Rating: 5