Free Space

சாரதிகளுக்கு 2500 ருபா தண்டப் பணம் விதித்தது அரசாங்கம் இலாபமீட்டிக் கொள்ள அல்ல...



(அஷ்ரப் ஏ சமத்)

  பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம். மரிக்காா் அவா்களின் நிதி ஒதுக்கீட்டில் கொலன்நாவையில் உள்ள 3 வீதிகளை 30 இலட்சம் ருபாவை அபிவிருத்தி செய்து நேற்று(15) மக்கள் பாவனைக்கு  திறந்து  வைத்தாா்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு மரிக்காா்  உரையாற்றுகையில்

இம்முறையின் அரசின் வரவு செலவுத்திட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு ஆக்க குறைந்தது 2500 ருபா தண்டப் பணம் விதிப்பது அரசாங்கம் இப் பணத்தினால் இலாபமீட்டிக் கொள்ளவதற்காக அல்ல, கடந்த ஆண்டு மட்டும் வாகணங்களின் விதி முறைகள் அற்று வாகணங்களை செலுத்தியதியன் தன் விளைவாக இந்த நாட்டின்    அப்பாவி குழந்தைகள், சிறுவா்கள். தாய்மாா்கள் உட்பட 3000 பேர் மரணித்துள்ளாா்கள்.  

போக்குவரத்து சட்டம் ஓழுங்கு விதிமுறைகளை மீறும் வாகண ஓட்டுணா்களை  கட்டுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் 2017ல் இருந்து ஆகக் குறைந்த தண்டப்பணமாக 2500 ருபாவை  போக்குவரத்து பொலிசாா் இதனை அமுல்படுத்த உள்ளாா்கள்.

 எதிா்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  08 ஆம் திகதி சீன  அரசாங்கத்தினால் 8 பில்லியன் ருபா செலவில் ஹம்பாந்தோட்டையில்  பாரிய வா்த்தக வலயங்கள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும்  மற்றும் சீன அரச பிரநிதிகளினாலும் ஆரம்பித்து வைக்கப்படும். அதே போன்று இம்முறை பாடசாலை மாணவா்கள் முதல் தடவையாக ஆண்டு 1 இல் ்இருந்து 13 ஆம் ஆண்டுவரை கற்கும் மாணவா்களுக்கு இரண்டு இலட்சம் ருபா காப்புறுதித்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று உயா்தரம் மற்றும் ஆசிரியா்களுக்கு கனணி டெப் வழங்கப்படுவதால் மாணவா்களின் ஆக்கத்திறன், உலக ரீதியில் ஆராய்ச்சி வெப்தளம், ஈமெயில் முறைமை தனது பாடங்களை பதிவு செய்யும் ஏதுவாக அமையும். எனவும் அங்கு பாராளுமன்ற உறுப்பிணா் மரைக்காா் தெரிித்தாா்ா்.
சாரதிகளுக்கு 2500 ருபா தண்டப் பணம் விதித்தது அரசாங்கம் இலாபமீட்டிக் கொள்ள அல்ல... சாரதிகளுக்கு 2500 ருபா தண்டப் பணம் விதித்தது அரசாங்கம் இலாபமீட்டிக் கொள்ள அல்ல... Reviewed by Madawala News on 11/17/2016 11:39:00 AM Rating: 5