Accaddemy

( படங்கள் இணைப்பு) பொல்கொல்லை நீர்தேக்கத்துக்கு அருகில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்.



- ஜே.எம்.ஹபீஸ்-

வத்தேகம பொலீஸ் பிரிவில் உள்ள பொல்கொல்லை நீர்தேக்க அனை பிரதேசத்தில்  இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கிமரணித்துள்ளதாக வத்தேகம பொலீசர் தெரிவிததனர்.(10.11.2016)


இது பறறி மேலும் தெரிய வருவதாவது- கட்டுகஸ்தோட்டை மஹாவலி மஹா வித்தியாலயத்தில் 11ம் வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றுள்ளனர். பின்னர் மூவருமாகச் சேர்ந்து மகாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளனர். பொல்கொல்லை நீர் தேக்க அனைக்குக் கீழ் புறமாக இவர்கள் நீராடியுள்ளனர்.

இதில் ஒருவர் கரைப்பிரதேசத்தில் நீராட மற்றவர்கள் இருவரும் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்துள்ளனர். அதில் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்படும் போது மற்றவர் காப்பாற்றச் சென்ற போது இருவருமாக நீரில் மூழ்கியு காணாமற் போயுள்ளனர். பின்னர் அயலவர்களின் உதவியுடன் மாலை 4 மணியளவில் இருசடலங்களும முpட்கப்பட்டுள்ளன.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பல்லேதலவின்ன பிரதேசத்தை சேர்ந்த நிபுன் மதுசங்க (16) மற்றும் நிவந்;த நயனஜித் (16) ஆகிய இருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடைய  மரணம் தொடர்பான பிரேத பரிசோனை இடம் பெற உள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் வத்தேகம பொலீஸார் தெரிவித்தனர்.

( படங்கள் இணைப்பு) பொல்கொல்லை நீர்தேக்கத்துக்கு அருகில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம். ( படங்கள் இணைப்பு) பொல்கொல்லை நீர்தேக்கத்துக்கு அருகில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம். Reviewed by Madawala News on 11/11/2016 02:56:00 PM Rating: 5