கடலுக்கு சென்ற மன்சூர் மற்றும் முனாஸ் (30) இதுவரை திரும்பவில்லை.



அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுத் திங்கட்கிழமை (14) அதிகாலை 5 மணிக்கு மீன் பிடிப்பதற்காகச் சென்ற இருவரும், இதுவரைத் திரும்பவில்லையென படகு உரிமையாளரான எம்.கே. சம்சுதீன் என்பவர் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொத்துவில் 5ஆம் பிரிவு சின்ன உல்லையைச் சேர்ந்த எம்.பி. மன்சூர் (வயது 40), எம்.சி. முனாஸ் (வயது 30) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடலுக்கு சென்ற மன்சூர் மற்றும் முனாஸ் (30) இதுவரை திரும்பவில்லை. கடலுக்கு சென்ற மன்சூர் மற்றும் முனாஸ் (30) இதுவரை திரும்பவில்லை. Reviewed by Madawala News on 11/15/2016 11:51:00 AM Rating: 5