( வீடியோ இணைப்பு) ஈரானில் இரு பயணிகள் ரயில்கள் மோதியதில் 31 பேர் பரிதாபமாக பலி.



ஈரான் நாட்டில் டாப்ரிஸ் நகரில் இருந்து, வடகிழக்கு நகரமான மஷாத் நோக்கி இன்று அதிகாலை ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இதேபோன்று செம்னான் நகரில் இருந்த மஷாத் நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த மற்றொரு பயணிகள் ரெயில், ஹாப்த்கான் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. இந்த இடம், டெக்ரான் நகரில் இருந்து 216 கி.மீ., தொலைவில் உள்ளது.

நின்று கொண்டிருந்த அந்த ரெயில் மீது, டாப்ரிஸ் நகரில் இருந்து வந்துகொண்டிருந்த ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலை தொடர்ந்து 4 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த சம்பவத்தில் 31பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 52 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. இந்த விபத்துக்கு காரணம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


( வீடியோ இணைப்பு) ஈரானில் இரு பயணிகள் ரயில்கள் மோதியதில் 31 பேர் பரிதாபமாக பலி. ( வீடியோ இணைப்பு) ஈரானில் இரு  பயணிகள் ரயில்கள் மோதியதில் 31 பேர்  பரிதாபமாக பலி. Reviewed by Madawala News on 11/25/2016 07:05:00 PM Rating: 5