Accaddemy

ஆப்பிள் நிறுவனத்திற்கு 40 கோடி யூரோக்கள் அபராதம்


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டில் 40 கோடி  யூரோக்கள் ( 1 யூரோ = ரூ 155.00 ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்த வில்லை  என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்த2013ம் ஆண்டு வரையிலான காலங்களில் ஆப்பிள் நிறுவனம் முறையாக பிரான்ஸ் நாட்டு வருமான வரித்துறையினருக்கு கணக்கு சமர்ப்பிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வருமான வரியாக 40 கோடி யூரோக்களை ஆப்பிள் நிறுவனம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்சின் பொருளாதார மற்றும் நிதி அமைச்சர் மைக்கேல் சாபின் வருமான வரி தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடப்போவதில்லை. வருமான வரி செலுத்துவது என்பது எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவானது என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு 40 கோடி யூரோக்கள் அபராதம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 40 கோடி யூரோக்கள் அபராதம் Reviewed by Madawala News on 11/25/2016 09:51:00 PM Rating: 5