Free Space

கள­னியில் சிக்­கிய 45 கோடி ரூபா பெறு­ம­தி­யான கொக்கைன் போதைப்­பொ­ருளின் பின்னால் உள்ள பிர­தான புள்ளி யார்?



(எம்.எப்.எம்.பஸீர்)

 சீனி கொள்­க­ல­னுக்குள் வைத்து நாட்­டுக்குள் கடத்­தப்­பட்ட சுமார் 31 கிலோ எடை உடைய 45 கோடி ரூபா­வுக்கும் அதிக பெறு­மதி கொண்ட கொக்கைன் போதைப் பொருள் மீட்­கப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய முக்­கிய புள்ளி ஒரு­வரைத் தேடி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்த கொக்கைன் போதைப் பொருளை நாட்­டுக்கு தரு­வித்­த­தாக நம்­பப்­படும் நப ரைத் தேடியே இவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணி­ய­ளவில் பேலி­ய­கொட பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட களனி, பெத்­தி­யா­கொட பகு­தியில் உள்ள சுர­வீர எனும் களஞ்­சி­யசா லைக்குள் இருந்தே பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் 31 கிலோ 844 கிராம் எடை­யு­டைய கொக்கைன் போதைப் பொரு­ளினை மீட்­டி­ருந்­தனர். அதன் சந் தைப் பெறு­மதி 47 கோடியே 76 இலட்­சத்து 60 ஆயிரம் ரூபா வரை இருக்கும் என கணக்­கி­டப்பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் நேற்­றைய தினம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் மாளி­கா­கந்த நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை தாக்கல் செய்­துள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

கொக்கைன் போதைப் பொரு­ளினைக் கைப்­பற்­றிய போதும் நேற்று வரை அத­னு டன் தொடர்­பு­டைய எந்­த­வொரு சந்­தேக நபரும் கைது செய்­யப்பட்­டி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் டி சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கள­னியில் சிக்­கிய 45 கோடி ரூபா பெறு­ம­தி­யான கொக்கைன் போதைப்­பொ­ருளின் பின்னால் உள்ள பிர­தான புள்ளி யார்? கள­னியில் சிக்­கிய 45 கோடி ரூபா பெறு­ம­தி­யான கொக்கைன் போதைப்­பொ­ருளின் பின்னால் உள்ள பிர­தான புள்ளி யார்? Reviewed by Madawala News on 11/11/2016 10:04:00 AM Rating: 5