Accaddemy

கண்டி தர்மராஜ கல்லூரி மாணவனை தாக்கிய காடையர்கள் 4 பேர் சிக்கினர்.


கண்டி தர்மராஜ கல்லூரியில் உயர் தர மாணவர் ஒருவரை இனந்தெரியாத சிலர் தாக்கி சம்பம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு அறிக்கையொன்றை பெற்று தருமாறு கூறி சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, காவற்துறைக்கு ஆலோசனை வழங்கி இருந்த நிலையில்,

தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத் தலங்களில் பிரபலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 21 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்து பிற்பகல் 1.40 மணியளவில் வெளியே வந்த குறித்த மாணவனை காடையர்கள்  சிலர் தாக்கியுள்ளமை அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
கண்டி தர்மராஜ கல்லூரி மாணவனை தாக்கிய காடையர்கள் 4 பேர் சிக்கினர். கண்டி தர்மராஜ கல்லூரி மாணவனை தாக்கிய காடையர்கள் 4 பேர் சிக்கினர். Reviewed by Madawala News on 11/23/2016 08:09:00 PM Rating: 5