Accaddemy

இலங்கை வாழ் ஜெர்மன் பிரஜை கொலையின் பின்னணி வெளியானது.. 4 பேர் கைது.



வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்ற ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மரகாரம்பளை, மகிழங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற 59 வயதான இலங்கையர் ஒருவர், தலையில் பலத்த காயத்துடன் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

உயிரிழந்த நபரின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள மற்றுமொரு வீட்டில் நேற்று முன்தினம் விருந்துபசாரம் இடம்பெற்றதுடன், இதன்போது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் அங்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து, விருந்துபசாரம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளருக்கும், ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்றவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை என்பன நேற்று இடம்பெற்றதுடன், தலையில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயத்திலிருந்து அதிகக் குருதி வெளியேறியதால் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, விருந்துபசாரம் நடைபெற்ற வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.

இருவீட்டாருக்கும் நீண்டகாலமாக நிலவிய தகராறே இந்த கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றப்புலனாய்வுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை வாழ் ஜெர்மன் பிரஜை கொலையின் பின்னணி வெளியானது.. 4 பேர் கைது. இலங்கை வாழ் ஜெர்மன் பிரஜை கொலையின் பின்னணி வெளியானது.. 4 பேர் கைது. Reviewed by Madawala News on 11/23/2016 09:17:00 PM Rating: 5