Accaddemy

மாத்தளை சாஹிரா தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு - 2016


மாத்தளை வலய முஸ்லிம் பாடசாலை பிரிவின் இணைப்பாளர் அல்ஹாஜ் M.R.U.ரில்வான் அவர்களின் வழிகாட்டலில் மாத்தளை சாஹிரா( தேசிய பாடசாலை )கல்லூரி BATCH 91 பழைய மாணவர்களின் பூரண அனுசரணையில் 2016 ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தொடர் முன்னோடி பரீட்சையிலும் வழிகாட்டல் கருத்தரங்கிலும் பங்கு பற்றி 2016 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தேசிய மட்ட பரீட்சையில் மாவட்ட வெட்டப் புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா 2016.11.18 வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு மாத்தளை Grand city hotel இல் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாத்தளை வலய கல்விப் பணிப்பாளர் திருவாளர் Y.M.மகிந்த. எஸ். யாப்பா அவர்கள் பிரதம அதிதியாகவும் விசேட அதிதிகளாக மாத்தளை வலய முஸ்லிம் பாடசாலைகளின் இணைப்பாளராகவும், உளவளத்துணையாளராக (தேசிய வளவாளர்) கடமையாற்றும் அல்ஹாஜ் M.R.U. ரில்வான் அவர்களும், உதவி கல்வி பணிப்பாளர் திருவாளர் P.P.மனோகர் அவர்களும் ஆரம்பக் கல்வி இணைப்பாளர் திருவாளர் V.தங்கராஜ் அவர்களும் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜனாபா.ரமீசா நசீர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் மாணவர்களின் வெற்றிக்காக வழிகாட்டிய ஆசிரியர்களும் பாடசாலை அதிபர்களும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
மிகநேர்த்தியாகவும் அழகாகவும் நடாத்தப்பட்ட இவ்விழா பி.ப. 5.00 மணியளவில் தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது

தகவல் -ஸாதிகீன் (ஆசிரியர்)
உக்குவளை.0774159446



 

 

மாத்தளை சாஹிரா தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு - 2016 மாத்தளை சாஹிரா தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு - 2016 Reviewed by Madawala News on 11/19/2016 11:39:00 PM Rating: 5