இந்தியாவில் இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. மோடியின் அதிரடி அறிவிப்பால் மக்கள் குழப்பத்தில்.




அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் ஊழலும், கருப்பு பணமும் நாட்டின் உறுதி நிலையை சீர்குலைப்பதாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். வறுமையை ஒழிப்பதே தமது அரசின் குறிக்கோள் என்றும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி அளித்து வருவதாகவும்,  பயங்கரவாதிகளுக்கு கொடுக்க எதிரிகள் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாகவும், பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். தவறுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என மோடி தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று  மோடி  அறிவித்தார் மக்கள் பெரும் பதட்டமாகி விட்டனர். கையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் அலைபாய்ந்தனர்.

கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும்  ஒழிக்க அதிரடி நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று  மோடி அதிரடியாக அறிவித்தார். இது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
மோடியின் அறிவிப்பு  சாதாரண மக்களுக்கு இது பெரும் ஷாக்காக அமைந்து விட்டது.

மொத்தக் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற மக்கள் சில்லறைகளை மாற்றுவதைப் பார்க்க முடிந்தது. திடீரென மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுடன் வந்ததால் கடைக்காரர்கள் குழம்பிப் போய் விட்டனர். விஷயம் தெரிந்ததும் அவர்களும் அதிரச்சி அடைந்தனர்.


மக்கள் குழப்பம் இன்று ஒவ்வொருவரிடமும் ரூ. 500, 1000 கரன்சி நோட்டுக்கள் இருப்பது சர்வ சாதாரணம். இதனால் மோடியின் அறிவிப்பால் கையில் இருந்த பணத்தை என்ன செய்வது என்று குழப்பத்தில் மக்கள் ஆழ்ந்து போயினர்.

பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அலை பாய்ந்தனர். இப்படி இரவு நேரத்தில் நம்மைப் புலம்ப வைத்து விட்டாரே மோடி என்று மக்கள் எரிச்சலடைந்ததையும் காண முடிந்தது.

இன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்

டிசம்பருக்கு பிறகு கையிருப்பில் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முடியாது

நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். யைமங்கள் வேலை செய்யாது

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களிலும் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை விடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பு

பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிதாக ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும்

மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

இந்தியாவில் இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. மோடியின் அதிரடி அறிவிப்பால் மக்கள் குழப்பத்தில். இந்தியாவில் இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. மோடியின் அதிரடி அறிவிப்பால் மக்கள் குழப்பத்தில். Reviewed by Madawala News on 11/08/2016 09:16:00 PM Rating: 5