Accaddemy

மோடியின் அறிவிப்புக்கு முன்னர் கோடிக்கணக்கில் வங்கியில் பணம் டெபாசிட் செய்த அவரின் பா.ஜ.க .



பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின் இந்தியன் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை கொல்கத்தாவின் சென்ட்ரல் அவென்யு இந்திய வங்கி உறுதி செய்துள்ளது என மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனசக்தி நாளேட்டில் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாரதிய ஜனதா கட்சி கடந்த 8-ந்தேதி ரூ. 60 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் என இரு முறை தனது ‘554510034’ என்ற கணக்கு எண்ணில் டெபாசிட்செய்துள்ளது. டெபாசிட் செய்யப்பட்ட பணம் முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.60 பகலிலும், இரவு 8மணிக்கு ரூ. 40 லட்சமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எப்படி 8 மணிவரை வங்கி செயல்பட்டது எனத் தெரியவில்லை.

மேலும், பாரதிய ஜனதா கட்சி வேறு கணக்கையும் வங்கியில் வைத்துள்ளது. அதில் நவம்பர் 1-ந்தேதி ரூ.75 லட்சமும், 5-ந்தேதி ரூ.1.25 கோடியாகும் டெபாசிட்செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சூர்ய கன்டா மிஸ்ரா கூறுகையில், “ பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத உத்தரவு முன்கூட்டியே பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிந்திருக்கும். அதனால், இதுபோல் மிகப்பெரிய அளவு தொகையை வங்கியில் டெபாசிட்செய்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம், மாநில பாரதிய ஜனதா தலைவர் திலிப் கோஷ் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறார். “ இந்த குற்றசாட்டை ஏற்க முடியாது. வழக்கமாக கட்சிக்கு வரும் நன்கொடைகள் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அந்த நன்கொடைகளுக்கும் ரசீது வழங்கிவிடுவோம். தேவைப்பட்டால், ரசீது நகல்களை ஆய்வுக்கு தருகிறோம்” என்றார்.
மோடியின் அறிவிப்புக்கு முன்னர் கோடிக்கணக்கில் வங்கியில் பணம் டெபாசிட் செய்த அவரின் பா.ஜ.க . மோடியின் அறிவிப்புக்கு முன்னர் கோடிக்கணக்கில் வங்கியில்  பணம் டெபாசிட் செய்த அவரின் பா.ஜ.க . Reviewed by Madawala News on 11/15/2016 01:48:00 PM Rating: 5