(இந்தியாவில் செய்தது போல்) இலங்கையில் 5,000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யவும்.



“பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்பு பணத்தை அழிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை உதாரணமாகக் கொண்டு, இலங்கையிலுள்ள 5,000 ரூபாய் நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும்” என்று பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் விபரம் இலகுவாக அம்பலமாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜபக்ஸாக்களிடன் கறுப்புப் பணம் உள்ளதா, இல்லை மத்திய வங்கி கள்ளர்களிடம் கறுப்பு பணம் உள்ளதா என நாம் அறிந்து கொள்ள முடியும் என உதய கம்மன்பில கூறியுள்ளார்.

அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1973ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் என்.எம்.பெரேராவினால் அப்போது 100 ரூபா தாளுக்கு பெறுமதி இல்லாமல் இருந்தது, அப்போதைய காலக்கட்டத்தில் அதிக அரச நிதிகள் பாதுகாக்கப்பட்டது எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
(இந்தியாவில் செய்தது போல்) இலங்கையில் 5,000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யவும். (இந்தியாவில் செய்தது போல்) இலங்கையில்  5,000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யவும். Reviewed by Madawala News on 11/21/2016 03:56:00 PM Rating: 5