Free Space

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் டுவிட்டரில் 3.18 லட்சம் பேரின் ஆதரவை இழந்த மோடி.



 
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று


கரன்சி செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக ஒரே நாளில் டுவிட்டர் தளத்தில் 3 லட்சம் பேரின் ஆதரவை மோடி இழந்துள்ளார். சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ் புக் உள்ளிட்டவற்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அதிகமானவர்களின் ஆதரவை பெற்றிருந்தவராக மோடி திகழ்ந்தார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு அளிப்பவர்கள், லைக் தெரிவிப்பவர்கள், பாலோ செய்பவர்கள் எப்போதும் லட்சக்கணக்கில் காணப்பட்டனர்.

இந்த சூழலில் கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 கரன்சி செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை மோடி வெளியிட்டார். இதையடுத்து ஒரே நாளில் டுவிட்டரில் இருந்து அவரது ஆதரவாளர்கள் 3 லட்சம் பேர் வெளியேறினர். இதுகுறித்து டுவிட்டர் கவுன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மோடியின் அறிவிப்பால் 3.18 லட்சம் பேர் அவரை பின்தொடர்வதை கைவிட்டுள்ளனர். டுவிட்டரில் மொத்தமாக இவ்வளவு ஆதரவாளர்களை இழந்தவர் என்ற வகையில் மோடி முதலிடத்தில் உள்ளார் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் டுவிட்டரில் 3.18 லட்சம் பேரின் ஆதரவை இழந்த மோடி. 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் டுவிட்டரில்  3.18 லட்சம் பேரின்  ஆதரவை இழந்த மோடி. Reviewed by Madawala News on 11/11/2016 08:49:00 PM Rating: 5