Kidny

Kidny

அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்ற பிரதமர் திட்டம் ..
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக இலங்கை எழுச்சி பெறுவதற்கு உலகின் பல நாடுகளின் ஒத்துழைப்புடன்  முன்னேற்றுவதற்கு திட்டங்கள் வகுக்ப்பட்டுள்ளதகவும் அவைகள் அடுத்த 2 வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதற்காக இலங்கையின் பல பிரதேசங்கள் பல வலையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக  மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்தார்.
 
இலங்கை பல்கழைக்கழகங்களில் கற்ற பெண்கள் அமைப்பின் 75வது ஆண்டுப் பொதுக் கூட்டம் இன்று(12) பொரளையில் உள்ள அவ்அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வு அமைப்பின் தலைவி  சீலா ஈபெட் தலைமையில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரிஜித் குமாரசுவாமி,

இலங்கையில் பொருளாதாரத்தில் அடையவுள்ள இலக்கும்  அவற்றுக்காக எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்  

கொழும்பு சகல நிர்வாக வலயங்கள் பல  புகையிரத வசதிகளை அமைப்பதற்கு  ஜப்பான்  முன்வந்துள்ளது. அத்துடன்  பாதைகள் அபிவிருத்திளும் முன்னெடுக்கப்படும்.அத்துடன்  கொழும்பில்  காலிமுகத்திடலில் உள்ள 269 ஹெக்டயர்  கடல் சார்ந்த துறைமுக நகரம் ” போட் சிட்டி,”  துபாய், சிங்கப்புர் நாடுகளுடன் இணைந்து சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.  

ஹம்பாந்தோட்டையில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட துறைமுகமும், விமான நிலையமும், 99 வருடங்களுக்கு சீன அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

இதற்காக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமேரிக்க டொலர் வருமானமாக கிடைக்கப்பெறுகின்றது.இந்த துறைமுகம் ஊடாக  இந்திய உற்பத்திகள் சீமெந்து போன்ற களஞ்சியஙக்ள நிர்மாணித்து சினா முன்னெடுக்க உள்ளது அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 50 ஆயிரம் ஏக்கர் காணியும் வழங்கப்பட உள்ளது.இதன் ஊடாக மொண்ரகாலை, ஊவா போன்ற பிரேதேசங்களும்  அபிவிருத்தி செய்யப்படும்.
  
இதே போன்று திருகோணமலை வலயங்களை சகல வரைபடங்களை வரைவதற்கு  சிங்கப்புர் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.இதில் பல உப திட்டங்களை யப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கும் வழங்கப்பட உள்ளது. 

ரஜரட்ட அநுராதபுர  பிரதேசங்கள்  - யப்பானுக்கும் மற்றும்  குருநாகல், குலியாப்பிட்டிய போன்ற நகரங்கள்  கொரியா போன்ற நாடுகளுக்கும், வழங்க்பட்டுள்ளன.

இலங்கையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகாத்தல்கள் உள்ளனர் அவர் களுக்கு 30 வருடங்களுக்கு மேல் ஓய்வுதிய சம்பளம் வழங்கப்படுகின்றது. இதற்காக பாரிய நிதியை இலங்கை வரி அறிவீட்டுப் பணத்தினை செலுத்த வேண்டியுள்ளது. 

இதில் கூடுதலான பாதுகாப்புத்துறையில் அரச உத்தியோகதர்கள் உள்ளனர்.    இலங்கையில் ஒரு பொதுநிருவாக சேவையில் நிர்வாக உயர் பதவி வகிக்கும் ஒரு செயலாளக்கு  ஆகக் கூடிய சம்பளம் 75ஆயிரம் ருபாவையே மட்டுமே பெறுகின்றார் ஆனால் ஒரு தனியார் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்  2- 25 இலட்சம் ருபா வரையிலான சம்பளத்தினைப்  பெறுகின்றனத்.

இதனால் அரச நிருவாக அதிகாரிகள் இலங்கையில் குறைந்த சம்பளத்தினையே பெறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு ஓய்வு பெறும் காலத்தில் சுமார் 30-35 வருடங்கள் ஓய்வுதியம் வழங்க வேண்டியுள்ளது. 

இலங்கையில் விவசாய உற்பத்தியில்  35 வீதம் மட்டுமே இருந்த போதிலும் அதில் 7.8 வீதமே வருமானம் கிடைக்கின்றது. ஆனால் புதிய நவீன முறைக்கு தமது உற்பத்திகளை மாற்றுவோமேயானால் நாம் முன்னேற வாய்ப்புகள் உண்டு.  விவசாயத்திற்காக இலவசமாக தண்ணீர் வசதிகள், மாணிய விலையில் பசளை வழங்கிய போதிலும் நமக்கு 6 வீதமே அதில் வருமாணம் உள்ளது.

இந்த நாட்டில் வாழும் ஒருத்தரின் தலா வருமானம் 2 அமேரிக்க டொலராகும்.  மேற்படி வர்த்தக வலயங்கள் அபிவிருத்தி கண்டால் எமது நாட்டில் இருந்து தொழிலாளர்களாகவும், பணிப்பெண்களாகும் மத்திய கிழக்கு நாடுகள் போகும் மனித வழம் குறையும். நமது நாட்டிலேயே அவர்கள் தொழில்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு. 

உலக வங்கி மற்றும்  ஜ.எம்.எப் (IMF) ,   ஜரோப்பிய யுணியன் போன்ற நிறுவனங்கள் எமது நாட்டுக்கு அவர்கள்  சில சலுகைகளுக்காக பல விதிகளை முன்வைக்கின்றனர்.

ஆனால் மலேசியா, சிங்க்பபுர் போன்ற நாடுகளில் ஜ.எம். எப் என்ற அமைப்பே அங்கு கிடையாது. அவர்கள் தமது சொந்த நாட்டின் மொத்த வருமாணத்தில்  நடைமுறைப்படுத்த முடிகின்றது என மத்திய வங்கியின் ஆளுனர்  கலாநிதி குமாரசுவாமி  குறிப்பிட்டார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்ற பிரதமர் திட்டம் .. அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்ற பிரதமர் திட்டம் .. Reviewed by Madawala News on 11/12/2016 11:52:00 PM Rating: 5