Ad Space Available here

பிடல்காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள் ..கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின் போண்றவர்களின் வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர் பிடல் கேஸ்ட்ரோ என்றால் மிகையாகாது

மாடு திருடி பிழைத்தவரல்லாம் தலைவர்களாக ஆகி நாட்டையே திருடி விற்றுக்கொண்டிருந்த காலமது. முதலாளித்துவத்துவத்தின் பிடியில் சிக்கித்தவித்த கியூபாவைவும் அதன் மக்களையும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் பெறு நிறுவனங்களை காப்பதை மட்டுமே பணியாக செய்துகொண்டிருந்தனர்.

பசி, பட்டிணை,வறுமை குடிக்கொள்ள தமது அடிப்படைதேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழ்நிலையில் சிக்கித்தவித்த மக்களின் துன்பதுயரங்களை பொருத்துக்கொள்ள முடியாமல் விவசாய பாரம்பரியமாக்கொண்ட தந்தையின் தமயனாக தனியொரு மனிதனாக எதிர்த்து நிற்கிறார் காஸ்ட்ரோ

பாடிஸ்டா எனும் ஆட்சியாளன் தேர்தல் நடத்துவதாக சொல்லிவிட்டு தேர்தலை நடத்தாமல் போக அதில் போட்டியிட களம்கண்ட காஸ்ட்ரோவுக்கோ அதிர்ச்சி அவனுக்கு எதிராக ஒரு புரட்சி நடத்தி அதில் பலபேரை இழந்தபின் நீதிமன்றத்தில் அவரை நிறுத்திய பொழுது வரலாறு என்னை விடுதலை செய்யும் என அவர் ஆற்றிய உரை சிலிர்க்க வைத்தது அரசாங்கமோ அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெகுசீக்கிரமே விடுதலை செய்தது

புறட்சியாளன் சே குவேராவுடன் சேர்ந்து பன்னிரண்டு தோழர்களுடன்  உதவியோடு கொரில்லா போரை ஆரம்பித்து  ஆட்சியை எளிய மக்களின் துணையோடு பிடித்து காண்பித்தார்.

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை கச்சா எண்ணெயை ரஷ்ய நிறுவனங்களிடம் வாங்க சொன்னார் .அவர்கள் நோ சொன்னார்கள் .தேசிய மயமாக்கினார் .அடிமாட்டு விலைக்கு கரும்பு விளைவிக்கும் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கிய யூனைடட் ப்ரூட் கம்பெனிக்கு அதே விலைக்கு இழப்பீடு கொடுத்து டாட்டா காண்பித்து அனுப்பினார் .அமெரிக்கா என்னடா இது என சுதாரிப்பதற்குள் இப்படி நடந்ததும் சர்க்கரையை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றது . இதற்குதான் காத்திருந்தேன் என அமெரிக்காவின் வங்கிகள்,நூற்றி அறுபத்தி ஆறு கம்பெனிகள் என எல்லாவற்றையும் தேசிய மயமாக்கினார் கேஸ்ட்ரோ . ரஷ்யா கைகொடுத்தது.

இடைநடுவே ஒரு ஆயிரத்து நானூறு பேரை அமெரிக்கா இவரின் ஆட்சியை ஒழிக்க அனுப்பி முகத்தில் கரிப்பூசி கொண்டது.

அவர் ஆட்சியை ஒழிக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகள் ஏராளம்.அவரை கொல்ல 638 வழிகள் என்ற ஆவணப்படமே வெளிவந்தது.

காலி என அமெரிக்கா காலியாக்க நினைத்த காஸ்ட்ரோ மற்றும் க்யூபா பல்வேறு பொருளாதார தடைகள்,சதிகள் யாவற்றையும் மீறி வளர்ச்சிப்பாதையில் நடை போடவே செய்தது . மக்கள் ஓயாமல் உழைத்தார்கள்.  உலகில் மிகச்சிறந்த பொது மருத்துவ வசதிகள் மக்களுக்கு கிடைக்கும் நாடுகளில் க்யூபா முதன்மையானது. குழந்தைகள் நலம்,கல்வி ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்படும் பணம் மொத்த வருமானத்தில் அதிகமே. மனித வள குறியீட்டில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் அந்நாடு சிரிக்கிறது.

க்யூபா அமெரிக்காவின் காலின் கீழ் உள்ள முள் போல உலக வரைபடத்தில் இருக்கும். அது காலில் தைத்த முள் இல்லை;கண்ணில் தைத்த முள்.
அந்த நம்பிக்கை தேசத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.

Muja Ashraff
பிடல்காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள் .. பிடல்காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள் .. Reviewed by Madawala News on 11/26/2016 02:34:00 PM Rating: 5