7 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25 000 ரூபா தண்டப்பண சட்டம்... சாரதிகளுக்கு இப்போதைக்கு நிம்மதி.



குறைந்தபட்ச அபராதத்தை 25000 ரூபா வரை அதிகரிக்கும் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட மாட்டாதென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க இதனைக் சகோதர மொழி ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஏழு வகையான போக்குவரத்து ஒழுங்கு மீறல்களுக்காகவே இந்த அபரதாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்ட மாஅதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த அபராதத் தொகையை அறவிடுவது தொடர்பில் மோட்டார் வாகனப் போக்குவரத்து கட்டளைச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

ஆகவே 25,000 ரூபா அபராதம் அறவிடுவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்கான தேவை அதிகளவில் காணப்படுவதாக பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

7 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25 000 ரூபா தண்டப்பண சட்டம்... சாரதிகளுக்கு இப்போதைக்கு நிம்மதி. 7 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25 000 ரூபா தண்டப்பண சட்டம்... சாரதிகளுக்கு இப்போதைக்கு  நிம்மதி. Reviewed by Madawala News on 11/29/2016 08:58:00 AM Rating: 5