7 இந்திய தூதரகங்களின் இணையதளங்களுக்கு தண்ணி காட்டி ’ஹேக்கிங்’, தரவுகளை வெளியிட்ட நெதர்லாந்து சிறார்கள்!



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 7 இந்திய தூதரகங்களின் இணையதளத்தில் உள்ள விவரங்களை திருடி ஆன் – லைனில் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, லிபியா, மலாவி, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ரோமானியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணைய தளங்கள் இணையதளங்களில் உள்ள விவரங்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. Kapustkiy மற்றும் Kasimierz l என்ற பெயரில் டுவிட்டர் கணக்கை பராமரித்து வருபவர்கள் இந்த 7 நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதள பாதுகாப்பு வளையத்தை உடைத்து தகவல்களை பெற்றதாக குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த இணையதளங்களின் தகவல்களை , ’அட்மின் மற்றும் லாக்கின்’ விபரங்கள், இமெயில் முகவரிகள், தொலைபேசி எண்கள், தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களின் பாஸ்போர்ட் எண்கள் ஆகியவை pastebin.com. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பின்னர் அந்த இணையதளத்தின் நிர்வாகிகளால் தகவல்கள் எடுத்துவிடப்பட்டு உள்ளது.

விவரங்களை திருடியவர்கள் தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் 161 இந்தியர்கள், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 35 இந்தியர்கள், இத்தாலியில் வசிக்கும் 145 இந்தியர்கள், லிபியாவில் வசிக்கும் 305 இந்தியர்கள், மலாவியில் வசிக்கும் 74 இந்தியர்கள், மாலியில் வசிக்கும் 14 இந்தியர்கள் மற்றும் ரோமானியாவில் வசிக்கும் 42 இந்தியர்களின் தகவல்களை வெளியிட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Kapustkiy என்ற டுவிட்டர் கணக்கை பராமரித்து வரும் ’ஹேக்கர்’ பத்திரிக்கை செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த இணையதளங்களின் பாதுகாப்பானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இந்திய தூதரக இணையங்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அவசியமானது. பிற இந்திய தூதரகங்களின் பாதுகாப்பும், பாதுகாப்பாக இல்லை,” என்று கூறி உள்ளார். 6 வயது சிறுவர்கள் கூட இதனுடைய பாதுகாப்பு வளையத்தை உடைக்க முடியும். என்று கூறி உள்ளார். மேலும் இணையதள விவரங்கள் திருடப்பட்டபோது பெறப்பட்ட மேலும் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் முடிவுசெய்தோம் என்று கூறி உள்ளார்.

இணையதளங்களை ஹேக்கிங் செய்தவர்கள் 18 வயதிற்கு உட்பட்டோர், நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். தங்களை “grey hats” என்று கூறிக்கொள்ளும் அவர்கள், இணையதளங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் உள்ளது என்பதை இணையதள நிர்வாகிகளுக்கு (அட்மின்) தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே திருடியதாக கூறி உள்ளனர். தகவல்களின் படி முதலில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதளங்களில் உள்ள விபரங்கள் திருடப்பட்டு உள்ளது, பின்னர் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி என பிற இந்திய தூதரக இணையதளங்களில் உள்ள விபரங்கள் திருடப்பட்டு உள்ளது.
7 இந்திய தூதரகங்களின் இணையதளங்களுக்கு தண்ணி காட்டி ’ஹேக்கிங்’, தரவுகளை வெளியிட்ட நெதர்லாந்து சிறார்கள்! 7 இந்திய தூதரகங்களின் இணையதளங்களுக்கு தண்ணி காட்டி  ’ஹேக்கிங்’, தரவுகளை  வெளியிட்ட நெதர்லாந்து சிறார்கள்! Reviewed by Madawala News on 11/07/2016 09:14:00 PM Rating: 5