யாழ் நகரில் சுகாதார சீர்கேடுகள் : 9 ஆவது நாட்களாக வேலை நிறுத்தம்..


பாறுக் ஷிஹான்
யாழ் மாநகரசபையில் சுகாதார தொழிலாளிகள்   9 ஆவது  நாட்களாக  இன்றும்(15) வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும்  மேற்கொண்டு வருவதனால்  தற்போது நகரில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றது.

குறிப்பாக யாழ் நகரப்பகுதியில் உள்ள உணவகங்களின் கழிவுகள்  துர்நாற்றம் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அங்காடி வியாபாரிகளின் கழிவுப்பொருட்கள்இஏனைய கடைகளின் கழிவுப் பொருட்கள் அங்காங்கே தேங்கி காணப்படுகின்றன.

இது தவிர பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது  மௌனமாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அனைத்து  தரப்பினரும்  பொறுப்புக்களை உணர்ந்து உரிய  சுகாதார தொழிலாளர்களுடன் உடனடி பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டு நிலைமையை சிர்செய்ய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை  விடுக்கப்படுகின்றது.


 


 

யாழ் நகரில் சுகாதார சீர்கேடுகள் : 9 ஆவது நாட்களாக வேலை நிறுத்தம்.. யாழ் நகரில் சுகாதார சீர்கேடுகள் : 9 ஆவது நாட்களாக வேலை நிறுத்தம்.. Reviewed by Madawala News on 11/15/2016 09:22:00 AM Rating: 5