அனுராதபுர முஸ்லீம் அரசியலில் மாற்றம் நிகழப் போகின்றதா ?



நாச்சியாதீவு பர்வீன்.

அனுராதபுர மாவட்டம் இலங்கை வரலாற்றில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்ற மாவட்டமாகும். இங்கு சிங்களப்பெரும்பான்மை மக்களுடன் கணிசமான அளவு முஸ்லீம் மக்களும் வாழ்கின்றனர். தனித்துவமான வாழ்க்கை முறைமையும்,

கலாச்சாரத்தையும் கொண்ட அனுராதபுர முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் வரலாறும் உண்டு. 1988 /89 களில் நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் மூன்று முஸ்லிம்கள் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.

 நொச்சியாகம ஹமீது, நாச்சியாதீவு ஷாஹுல் ஹமீட், ஈதல்வெட்டுனுவெவ நாசர் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் சகோதரர் ஈதல்வெட்டுனுவெவ நாசர் ஜேவிபி இனரால் படுகொலை செய்யப்பட்டார். எஞ்சிய இருவரும் தம்மாலான சேவைகளை மக்களுக்கு
செய்தனர்.

பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு மாகாண சபைத்தேர்தலிலும் முஸ்லிம்
பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது. இறுதியாக கடந்த 2015 ஆம்
ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றில் முதலாவது தடவையாக  அனுராதபுர மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் நாடாளுமன்றத்திக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவைக்காக அனுராதபுர மாவட்டத்திலிருந்து முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றத்திட்க்கு தெரிவு செய்யப்பட்டதை அனுராதபுரத்து முஸ்லிம்கள் கொண்டாடினார்கள். அந்த வெற்றிக்கும் வரலாற்று நிகழ்வுக்கும் சொந்தக்காரர் தொழில் அதிபர் இஷாக் ரஹ்மான் ஆவார்கள்.

கட்சிகளை மறந்து  தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தாண்டி தொழில்
அதிபர் அல்ஹாஜ் இஷாக் ரஹ்மான் அவர்களை முஸ்லிம்கள் ஆதரித்தார்கள் அத்தோடு கணிசமான பெரும்பான்மை இன வாக்குகளும் அவருக்கு கிடைத்தது அதுவே அவரது வெற்றியை உறுதி செய்தது எனலாம்.தற்போது பாராளுமன்றத்தில் இஷாக் ஹாஜியாரும், மாகாண சபையில் ஹொரோவபொத்தானையை சேர்ந்த ஷஹீத் ஆசிரியரும் அனுராதபுரத்து முஸ்லிம்களின் பிரதிநிதியாக அங்கம் வகிக்கின்றார்கள்.

இதட்கிடையில் ஒரு கஞ்சா வியாபாரியும் இன்னொரு ஏஜெண்சி நடத்துகின்ற
மார்வாடியும் அடுத்த முறை மாகாண சபைத்தேர்தலில் அமைச்சர் ரிஷாட்
பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் டிக்கெட் பெற்று UNP
பட்டியலில் இடம்பிடிப்பதட்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளார்கள். இருவருமே தமது பணபலத்தை காட்டும் முகமாக இப்போது களத்தில் குதித்துள்ளார்கள்.

இதில் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹ்மான் தமது
கூட்டங்களுக்கு கூட்டிச்செல்வதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இந்த
விடயத்தில் இன்னும் தெளிவைப்பெற இன்னும் சில நாட்கள் காத்திருக்க
வேண்டியிருக்கும் ..

மாகாண சபைக்கு போட்டியிட துடிக்கின்ற இருவருமே ஊழல் பேர்வழிகள், ஊரையும் மக்களையும் ஏமாற்றி இவர்கள் பணம் சமாத்தித்த விதம் முழு மாவட்டமும் அறியும் அவர்களிடம் பணம் உள்ளது என்பதட்காய் அமைச்சர் ரிஷாட் பிழையான முடிவினை எடுப்பார் என்றால் அது வரலாற்றுப்பிழையாகிவிடும்.

எமது மாவட்டத்த்திட்க்கு தேவை குறுக்குவழியில் பணக்காரர்களாகிய
கயவர்களல்ல மாறாக மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற மனிதநேயமுள்ள படித்த நல்லவர்கள் இது விடயத்தில் அமைச்சர் ரிஷாட் சிந்திப்பாரா......?

அனுராதபுர முஸ்லீம் அரசியலில் மாற்றம் நிகழப் போகின்றதா ? அனுராதபுர முஸ்லீம் அரசியலில் மாற்றம் நிகழப் போகின்றதா ? Reviewed by Madawala News on 11/27/2016 12:28:00 AM Rating: 5