Ad Space Available here

இலங்கை இராணுவம், இரா­ணுவப் புரட்சியில் இறங்குமா? பதில் இதோ.இலங்கை இரா­ணுவம் இன்று உலக அளவில் தனது  பெயரை மதிக்கத்­தக்க மட்­டத்தில் வைத்­துள்­ளது, மக்­களால் உரு­வாக்­கப்­பட்ட அர­சாங்­கத்­தி­னையும் இரா­ணுவம் பாது­காக்கும். எனவே குறு­கிய  அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இரா­ணு­வத்­தினை பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­தீர்கள் என கடற்­ப­டைத்­த­ள­பதி வயிஸ் அத்­மிரால் ரவீந்­திர சீ விஜே­ரத்ன தெரி­வித்தார்,

அதே­நேரம் யுத்தம் நிறைவின் முன்னும் பின்னும் இன்று வரை­யிலும் கூட இலங்கை இரா­ணுவம் சூழ்ச்சி குறித்தோ புரட்சி குறித்­தோ­சிந்­திக்­க­வில்லை. எதிர்­கா­லத்­திலும் அதற்கு இட­மில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்,

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் மக்கள் பிர­தி­நி­யாக இருக்­கின்ற ஒருவர் திடீ­ரென இரா­ணுவ புரட்சி ஒன்று தொடர்பில் கருத்து தெரி­வித்­த­மை­யை­யிட்டு நாம் பெரும் அதி­ருப்­தியில் உள்ளோம், இரா­ணு­வத்­திற்­கென இந்­நாட்டில் வகுக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே நாங்கள் செயற்­ப­டுவோம்,

இரா­ணு­வத்தின் செயற்­பா­டு­களில் எவ்­வா­றாக அமைந்­துள்­ளன என்­பது தொடர்பில் மக்கள் பெரிதும் அறிந்­தி­ருப்­ப­தில்லை, அதனால் இரா­ணு­வத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் விமர்­சிக்­கின்ற போது அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்,

தற்­போது இரா­ணுவம் மன­த­ளவில் வீழ்த்­தப்­பட்­டுள்­ளது என்ற பிர­சா­ரங்கள் எல்லாம் எழு­கின்­றன. ஆனால் அவ்­வா­றான ஒரு நிலையில் இலங்கை இரா­ணுவம் இல்லை முன்னர் இரா­ணு­வத்­திற்கு கிடைக்­கா­தி­ருந்­த­வற்­றையும் தற்­போது பெற்­றுக்­கொண்­டுள்ளோம், அதனால் இரா­ணு­வத்தின் அதி­கா­ரங்­க­ளையும் ஏனைய செயற்­பா­டு­க­ளையும் பலப்­ப­டுத்­தியும் உள்ளோம்,

 இரா­ணு­வத்தின் பலம் எந்த வித்­திலும் குறை­ய­வில்லை . எவ­ராலும் குறைக்­கப்­ப­டவும் இல்லை. மாறாக முன்­பை­விட தற்­போது இரா­ணு­வத்தின் பலம் அதி­க­ரித்­துள்­ளது என்றே குறிப்­பிட வேண்டும்,

யுத்­த­கா­லத்தில் இரா­ணுவ வீரர்கள் நூற்­றுக்­க­ணக்­கான மீற்­றர்­க­ளுக்கு அப்பால் சென்ற மிதந்­துக்­கொண்­டி­ருந்த ஆயுத கப்­பல்­களை கைப்­பற்றி அவற்­றுக்கு உரிமை கோரிய தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளுக்கும் பதி­லடி கொடுத்­தனர், இத்­த­கைய ஆற்றல் உள்ள இரா­ணுவம் மன அளவில் வீழ்ந்­துள்­ளது என்று கூறினால் அது வேடிக்­கை­யா­ன­தாகும்,

அதேபோல் எமது நாடு ஜன­நா­யக நாடு என்ற வகையில் அதனை உரு­வாக்­கி­ய­வர்கள் இந்­நாட்டு மக்­க­ளாவர். எனவே மக்­களின் வாக்­கு­களால் உரு­வாக்­கப்­பட்ட அர­சாங்­கத்தை பாது­காப்­பதே இரா­ணு­வத்தின் கட­மை­யாகும். அத­னைதான் இன்­று­வ­ரை­யிலும் இரா­ணுவம் முறை­யாக சட்­ட­வி­தி­களை பின்­பற்றி செய்து வரு­கின்­றது,

ஆகவே அண்­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் குறிப்­பிட்­டது போன்று இரா­ணுவ சூழ்ச்­சியை மேற்­கொள்­ளவோ அல்­லது புரட்­சியை உண்­டு­பன்­னவோ ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்­க­போ­வ­தில்லை. யுத்தம் நிறை­வ­டைந்த காலத்­திலும் அதற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் தற்­கா­லத்­திலும் நாங்கள் அவ்­வாறு சிந்­தித்­த­தில்லை என்­பதை தெளி­வாக புரிந்­துக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

எதிர்­கா­லத்­திலும் அவ்­வா­றா­ன­தொரு நிலைமை தோற்றம் பெறு­வ­தற்கு இட­மில்லை. எனேவ இன்று உலக நாடுகள் மத்­தியில் தனி­யான மரி­யா­தையை ஈட்­டிக்­கொண்­டுள்ள இலங்கை இரா­ணு­வத்தை கொச்­சைப்­ப­டுத்தும் வகை­யி­லான ஒரு கருத்து வெளி­யா­னமை தொடர்பில் இரா­ணுவம் அதி­ருப்­ப­தி­ய­டைந்­துள்­ளது, எனவே அர­சியல் கருத்­தா­டல்­க­ளுக்­கா­கவும் குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கா­கவும் எம்மை பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டாம்,

அத்­துடன் தற்­போது இரா­ணுவம் படிப்­ப­டி­யாக வலு­வாகி வரு­கின்­றது. கப்பல் வழியே பய­ணித்து தீவு­களில் இறங்கி திட்டம் வகுத்து போரா­டு­வ­தற்­கான புதிய படை­யணி ஒன்றை உரு­வாக்கி வரு­கின்றோம். அதற்­கான பயிற்­சிகள் திரு­கோ­ண­ம­லையில் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்­க­மைய இரா­ணு­வத்தின் அதி­கா­ரங்­களும் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன,

மேலும் இரண்டு கப்பல் இரா­ணு­வத்தின் தேவை­க­ளுக்­காக கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. இவை இந்­தி­யா­வினால் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன, அடுத்த வருடம் குறித்த கப்­பல்­களும் இலங்­கைக்கு வர­வுள்­ளன, மேலும் நாம் சக­லரும் நாட்­டிற்கு கடல் மார்க்­க­மாக வந்­த­வர்கள். இலங்­கையும் ஒரு தீவாகும் எனவே எமக்கு கட­லுக்கும் உள்ள தொடர்­பா­னது மிக அதி­க­மாகும், எதிர்­கா­லத்தில் கடல் மார்க்­க­மாக நாட்­டிற்கு எவ்வாறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவாய் ஈட்டலாம் என்றும் ஆராய்ந்து வருகின்றோம்,

அதேநேரம் இராணுவத்திடமுள்ள பலமான புலனாய்வு பிரிவின் உதவியோடு கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும் போதை பொருட்களையும் அதிகமாக கட்டுப்படுத்தியுள்ளோம், அதுபோன்று எவன் கார்ட் நிறுவனமும் இன்று சிக்கல் ஏதும் இன்றி சுமூகமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது, அண்மையிலும் அந்நிறுவனத்தின் பாரிய வருமானத்தினை அரச உடமையாக்க திறைசேரிக்கு அனுப்பி வைத்திருந்தோம் என்றார்,
இலங்கை இராணுவம், இரா­ணுவப் புரட்சியில் இறங்குமா? பதில் இதோ. இலங்கை இராணுவம், இரா­ணுவப் புரட்சியில் இறங்குமா? பதில் இதோ. Reviewed by Madawala News on 11/23/2016 11:44:00 AM Rating: 5