கடந்த ஆட்­சியில் வெள்ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள் எது­வுமே நடை­பெ­ற­வில்லை. அதெல்லாம் போலி நாடகம்



வெள்ளை வேன் கடத்தல் என்­ற­தொரு சம்­ப­வமே கடந்த அர­சாங்­கத்தில் இருக்க வில்லை. புலம்­பெயர் தமி­ழர்­களும் சர்­வ­தேச ஊட­கங்­களும் தான் இவ்­வாறு வெள்ளை வேன் கடத்தல் என கூறி போலி நாட­க­மா­டி­ன என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

போரின் போதும் அதற்கு பின்­னரும் கிடைக்­கப்­பெற்ற சீனாவின் உத­வி­களை மறந்து விட முடி­யாது எனவும் குறிப்­பிட்டார்.

பொர­ளையில் அமைந்­துள்ள ஸ்ரீ வஜி­ராஸ்­ரம பௌத்த நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில் ,

பிரகீத் எக்­னெ­லி­கொட மற்றும் லசந்த விக்­ர­ம­துங்க ஆகியோர் தொடர்­பான சம்­ப­வங்கள் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் வெள்ளை வேன்

கடத்தல் இடம்­பெற்­ற­தாக எனக்கு தெரி­யாது. நான் கடந்த அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்தேன். ஆனால் நீங்கள் கூறும் வெள்ளை வேன் கடத்தல் இடம்­பெற வில்லை. சேனல் –- 4 போன்ற சர்­வ­தேச ஊட­கங்கள் மற்றும் சர்­வ­தேச நாடு­களில் வாழும் புலம்­பெயர் தமி­ழர்­களின் போலி­யான பிர­சா­ரமே அது­வாகும். எனவே அவ்­வா­றான வெள்ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள் கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெறவில்லை.

போரின் போதும் அதற்கு பின்­னரும் சீனாவின் ஒத்­து­ழைப்­பு­களை மறந்து விட முடி­யாது. இந்­தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­களும் உத­விகளை செய்­தன.

ஆனால் சீனா பாரிய உத­வி­களை இலங்­கைக்கு செய்­துள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்கம் தேர்­தலின் போது

சீனாவை கடு­மை­யாக எதிர்த்­தது. மோதல்­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டது. துறை­முக நகர் திட்­டத்தை நிறுத்­தி­யது. இதனால் சீனாவிற்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகமாகும்.

ஆனால் அவர்கள் அதனை கோரவில்லை. இன்று சீனாவிடம் மண்டியிட்டுள்ளமை வேடிக்கையாக உள்ளது என்றார்.
கடந்த ஆட்­சியில் வெள்ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள் எது­வுமே நடை­பெ­ற­வில்லை. அதெல்லாம் போலி நாடகம் கடந்த ஆட்­சியில் வெள்ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள் எது­வுமே நடை­பெ­ற­வில்லை.  அதெல்லாம் போலி நாடகம் Reviewed by Madawala News on 11/04/2016 10:13:00 AM Rating: 5