Free Space

கட்டுகஸ்தோட்டை, நவயாலதென்ன மகாவலி ஆற்றில் இனம் தெரியாத சடலம் மீட்பு.



- ஜே.எம்.ஹபீஸ்-

கட்டுகாஸ்தோட்டைப் பொலீஸ் பிரதேசத்தில் மகாவலி நீர்த்தேக்கத்தில் இனம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

(2.11.2016) காலை சுமார் 10 மணியளவில் மகாவலி கங்கையில் மிதந்து வருகையில் நவயாலதென்ன என்ற இடத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் சுமார் ஒருவாரகாலம் பழைமையானது என்றும் பொலீசார் தெரிவித்தனர்.

இது ஒரு அணின் சடலம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 சடலத்தை இனம் காண முடியாதுள்ளதாகவும் தகவல் தெரிந்தவர்கள் இது விடயமாக கட்டுகாஸ்தோட்டைப் பொலீசாருடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டுகின்றனர்.
கட்டுகஸ்தோட்டை, நவயாலதென்ன மகாவலி ஆற்றில் இனம் தெரியாத சடலம் மீட்பு. கட்டுகஸ்தோட்டை, நவயாலதென்ன  மகாவலி ஆற்றில் இனம் தெரியாத சடலம் மீட்பு. Reviewed by Madawala News on 11/02/2016 01:03:00 PM Rating: 5