tg

வரவு - செலவுத் திட்டத்தின் முக்கிய அறிவிப்புகள் இங்கு பார்க்கலாம் .நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவதும் வரவு செலவுத் திட்டம், இன்று வியாழக்கிழமை (10), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், 2017ஆம் ஆண்டுக்கான இந்த வரவு - செலவுத் திட்டம் மீதான வாசிப்பு, பிற்பகல் 2 மணிக்கு, இடம்பெறும்.

வரவு - செலவுத் திட்டத்தின் முக்கிய அறிவிப்புகளை இங்கு அப்டேட் செய்யப்படும்... இணைந்திருங்கள் எம்முடன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு சமூகமளித்துள்ள நிலையில், 

நிதியமைச்சர் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க ஆரம்பித்து தனது உரையை ஆரம்பித்தார்..

நாட்டில் நல்லதோர் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான, நல்லாட்சி அரசாங்கத்தின் 2ஆவது வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பத்தில் மகிழ்ச்சிஉஅடைகிறேன்..

வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.அடுத்த தலைமுறைக்கான நல்லதொரு வரவு-செலவுத்திட்டமாக இது அமையவுள்ளது . 2017ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான ஆண்டாகும்.
வரலாற்றில் முதன்முறையாக, வரவு - செலவுத் திட்டத்துக்காக, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வராமல், அரசியல் நோக்கத்துக்காக, மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் முகங்கொடுக்கும் சவால்களை எதிர்நோக்குவதற்காக, எம்மிடமுள்ள தீர்வுகளை முன்வைப்போம். என தனது உரையில் தெரிவித்தார்...

பால் பண்ணையாளர்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 மாடுகள் வழங்க திட்டம்.

கோழி பண்ணையாளர்களுக்கு 15 ஆயிரம் குளிரூட்டி சாதனங்கள் வழங்கப்படும்.

மீன் பிடித் துறையில் 163 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளது. இதனை ஐந்து மடங்களால் அதிகரிக்க நடவடிக்கை

கல்விக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.


1 கிலோ கோழி இறைச்சியின் அதிகூடிய விற்பனை விலை 420 ரூபாவாக நிர்ணயம்.

மாணவர்களுக்கு 2இலட்சம் ரூபா காப்புறுதி வழங்க தீர்மானம்

விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  175 மில்லியன் ஒதுக்கீடு

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உயர்தரப் மாணவர்களுக்கு 28 ஆயிரம் உயர்தர கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக் கணனி வழங்கப்படும்.

2020 ஆம் ஆண்டு தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் சேர்த்து கொள்ளப்படுவர்.

மெகா பொலிஸ் திட்டத்துக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சிறப்பான வெளிநாட்டு  முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா


சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள் சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட  பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்

தனியார் பஸ் சேவைகள் 11 மணிவரை இயங்க வேண்டும்.

 கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல்  வேண்டும்.

தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி நீக்கம்

தனியார் துறையினருக்கு 5 நாள் மற்றும் 45 மணிநேர   வேலை

பார்மசி நிலையங்கள் பதிவு செய்யாவிட்டால் ஒரு இலட்சம் ரூபா தண்டம்

சிறிய வெட்டுப்புள்ளிகளால்  பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாமல் இருக்கும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை மேற்கொள்ள 8 இலட்சம் ரூபா வழங்கப்படும். 300 மில்லியன் ஒதுக்கீடு.

இலங்கையின் பெயரை பிரசித்தபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பதுளையில்   உள்ளூர் விமான நிலையம் அமைக்கப்படும்

அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் வியாபார நிலையங்களை அமைக்க 1000 மில்லியன் ஒதுக்கீடு   தனியார் துறைக்கும்  அழைப்பு.

தனி வீட்டுத் திட்டத்தில் முதலில் 5 இலட்ச வீடுகள் :  மலையகத்துக்கு 25 ஆயிரம் வீடுகள்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்களுக்கு பதிலாக 32 ஆசனங்களை கொண்ட பஸ்கள் அறிமுகம்.

முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக புதியகார்கள். இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மின்சாரத்தை குறைந்த விலையில் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பது உறுதி செய்யப்படும்..

மார்ச் 31ஆம் திகதியிலிருந்து புதிய உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

பெருந்தோட்டத்துறை தோட்டத் தொழிலாளர்களுக்கான 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதற்கான காணிகள், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.

 ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலர் வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள். இதற்காக 1221 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்.

புதிதாக துறவியாகுபவர்களுக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில்.

 ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் உபகரண கொள்வனவுக்கு வரி விலக்குடனான கடன் வசதி  .

சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண்பதற்கு 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சுகதாஸ அரங்கை புனரமைக்க 175 மில்லியன் ஒதுக்கீடு.


அரசாங்கத்துக்கு சொந்தமான வீடுகளில் 10 வருடத்துக்கு மேல் தங்கியிருந்தால் வீடுகள் சொந்தமாக்கப்படும்..

பருப்பு ஒரு கிலோகிராமின் விலை  10 ரூபாயால் குறைப்பு.

பயறு ஒரு கிலோகிராமின் விலை  15 ரூபாயால் குறைப்பு.

நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரையான நேரத்தில் 50 ரூபாயாக குறைக்கப்படுகின்றது

வருமான வரி மீள்பரிசீலனை செய்யப்படும் .

காஸ் ஒன்றுக்கான விலை 25 ரூபாய் குறைக்கப்படுகின்றது.

400 கிராம் உள்நாட்டு பால் மாவின் விலை 250 ரூபாவாக  குறைப்பு

பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

கார்பனுக்கு புதிய வரி.

 சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.

 425 கிராம்  நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.
100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.

உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.

நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை  5 ரூபாயால் குறைப்பு.

இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்.

இலங்கையிலுள்ள 100 மிகப்பெரிய தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணையுமாறு நான் கோரிக்​கை விடுக்கின்றேன்.

வரவு - செலவுத்  திட்டத்தை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பினை நிறைவேற்றுகின்றேன். அனைவருக்கும் நல்லாசி கிடைக்கட்டும்  - என   நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை நிறைவு செய்தார்.
Wait / Refresh For More..
வரவு - செலவுத் திட்டத்தின் முக்கிய அறிவிப்புகள் இங்கு பார்க்கலாம் . வரவு - செலவுத் திட்டத்தின் முக்கிய அறிவிப்புகள் இங்கு பார்க்கலாம் . Reviewed by Madawala News on 11/10/2016 05:54:00 PM Rating: 5