போராட்டம் செய்யும் பஸ் சாரதிகளை அடித்து விரட்ட வேண்டும்.



போராட்டம் செய்யும் பஸ் சாரதிகளை அடித்து விரட்ட வேண்டுமென பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று சாரதிகளின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

போக்குவரத்து விதி மீறல்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதனை கண்டித்து போராட்டம் நடத்த உத்தேசித்துள்ள பஸ் சாரதிகளை மக்கள் அடித்து விரட்ட வேண்டும். அதிகளவில் விபத்துக்கள் பஸ் சாரதிகளினாயே மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்களின் சாரதிகள் தொடர்பில் அனுதாபப்படுவதாகத் பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் செய்யும் பஸ் சாரதிகளை அடித்து விரட்ட வேண்டும். போராட்டம் செய்யும் பஸ் சாரதிகளை அடித்து விரட்ட வேண்டும். Reviewed by Madawala News on 11/29/2016 10:22:00 AM Rating: 5