Accaddemy

ஞானசாரதேரர் இனவாதத்தை கக்கினாலும் கைது செய்ய வேண்டும்.



சி.வி.விக்­னேஸ்­வ­ர­னாக இருப்­பினும் ஞான­சா­ரதே­ர­ராக இருப்­பினும் இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­களை கைது செய்ய வேண்டும். இன­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டத்தை கொண்டு வர­வேண்டும். மஹிந்த ராஜ­ப­க் ஷவை வீட்­டுக்கு அனுப்­பி­யதும் இன­வா­த­மே­யாகும் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் மதிப்பை குறைக்கும் வகையில் ஆளும் எதி­ர­ணி­யினர் மாறி மாறி ஒரு­வரை ஒருவர் திருடர் என சேறு பூசு­வது நல்­ல­தல்ல. மக்கள் பிர­தி­நிதி என்­ப­தனை மறந்து செயற்­ப­டக்­கூ­டாது. திருட்டு செய்­தி­ருந்தால் அதனை நீதி­மன்றம் பார்த்துக் கொள்ளும். அனைத்­திலும் எதிர்ப்­பினை வெளி­யி­டாமல் எதி­ர­ணி­யினர் பொறுப்­பு­மிக்­க­வர்­க­ளாக செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், பாரா­ளு­மன்­றத்­திற்குள் அமர்ந்து கொண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் மாறி மாறி திரு­டர்கள் என்று திட்­டு­வது நல்­ல­தல்ல. நாம் அனை­வரும் மக்கள் பிர­தி­நிதிகள் என்­ப­தனை மறந்து செயற்­ப­டு­கின்றோம். இந்த முறையை மாற்ற வேண்டும். திரு­டர்கள் இருந்தால் அவர்­களை நீதி­மன்றம் பொறுப்­பேற்கும். அவர்­களை நீதி­மன்­றத்­திடம் ஒப்­ப­டைத்து விடுவோம்.

இல்­லை­யென்றால் நாட்டு மக்கள் எம்மை திரு­டர்கள் என்று கூறும் நிலைமை ஏற்­படும். ஆளும் கட்­சி­யினர், எதி­ர­ணி­யினர் நாம் அனை­வரும் திருடர் என கூறி பாரா­ளு­மன்ற மதிப்பை இழக்க செய்­ய­கூ­டாது.

வரவு – செல­வுத்­திட்­டத்தில் பிழைகள் இருக்­கலாம். ஆனாலும் அதனை விவாதம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். எதி­ர­ணி­யினர் பட்ஜெட் பிழையை மாத்­திரம் பார்க்­காமல் நல்­ல­வை­க­ளுக்கு ஆத­ரவு வழங்க வேண்டும் தேசிய அர­சாங்கம் நிறுவ வேண்டும் என்­ப­த­னையே மஹிந்த ராஜபக் ஷ விரும்பினார்.

இந்நிலையில் தற்போது பொது பலசேனா வின் இனவாதம் மீளவும் தோன்றியுள்ளது. மஹிந்த ராஜபக் ஷவை வீடுக்கு அனுப் பியது பொது பல சேனாவாகும்.
ஞானசாரதேரர் இனவாதத்தை கக்கினாலும் கைது செய்ய வேண்டும்.  ஞானசாரதேரர் இனவாதத்தை கக்கினாலும் கைது செய்ய வேண்டும். Reviewed by Madawala News on 11/19/2016 10:12:00 AM Rating: 5